அரசியல் செய்தி

தமிழ்நாடு

'டிபாசிட்' வாங்கும் வேட்பாளர் யார்?

Added : மே 01, 2021
Share
Advertisement
திருப்பூர் : பதிவான ஓட்டில், ஆறில் ஒரு பகுதி அளவுக்கு ஓட்டு வாங்கிய வேட்பாளர் மட்டுமே, 'டிபாசிட்' தொகையை திரும்ப பெற முடியும். கடந்த, 25 நாட்களாக காத்திருந்த நிலையில், இன்று, ஒவ்வொரு வேட்பாளருக்கு மக்கள் அளித்த ஓட்டு விவரம் தெரியவரும். தொகுதியின் வெற்றி வேட்பாளர் யார் என்பதும், தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதையும் இன்று இரவுக்குள் முடிவு செய்ய

திருப்பூர் : பதிவான ஓட்டில், ஆறில் ஒரு பகுதி அளவுக்கு ஓட்டு வாங்கிய வேட்பாளர் மட்டுமே, 'டிபாசிட்' தொகையை திரும்ப பெற முடியும்.

கடந்த, 25 நாட்களாக காத்திருந்த நிலையில், இன்று, ஒவ்வொரு வேட்பாளருக்கு மக்கள் அளித்த ஓட்டு விவரம் தெரியவரும். தொகுதியின் வெற்றி வேட்பாளர் யார் என்பதும், தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதையும் இன்று இரவுக்குள் முடிவு செய்ய வாய்ப்புள்ளது.வெற்றி, தோல்வி என்பது தேர்தலில் சகஜமான ஒன்றாக மாறிவிட்டது. முக்கிய கட்சிகளுக்கு அடுத்தாக உள்ள, சிறிய கட்சிகளும், தேய்ந்து போயுள்ள பெரிய கட்சிகளும் கூட, 'டிபாசிட்' வாங்க வேண்டும் என்பதை, கவுரமாக நினைக்கின்றனர்.சட்டசபை தேர்தலை பொறுத்தவரை, 'டிபாசிட்' திரும்ப பெற, பதிவான ஓட்டுக்களில், ஆறில் ஒரு பகுதி ஓட்டுக்களை பெற்றிருக்க வேண்டும். அதற்கும் குறைவான ஓட்டு வாங்கியவர், 'டிபாசிட்' இழந்த வேட்பாளராக கருதப்படுவார்.

திருப்பூர் மாவட்டத்தில், எட்டு லட்சத்து, 26 ஆயிரத்து, 798 ஆண்கள்; எட்டு லட்சத்து, 17 ஆயிரத்து 255 பெண்கள்; 32 திருநங்கைகள் என, 16 லட்சத்து, 44 ஆயிரத்து, 085 வாக்காளர்கள் (69.67 சதவீதம்) ஓட்டுப்பதிவு செய்துள்ளனர்.தாராபுரம் தொகுதியில், ஒரு லட்சத்து, 91 ஆயிரத்து, 740 பேர் (74.16 சதவீதம்) ஓட்டளித்துள்ளனர்; 'டிபாசிட்' பெற, 31 ஆயிரத்து, 957 ஒட்டுக்கும் அதிகமாக பெற்றிருக்க வேண்டும்.அவிநாசியில், இரண்டு லட்சத்து, 10 ஆயிரத்து, 929 பேர் (75.18 சதவீதம்) ஓட்டளித்துள்ளனர். அவர்களில், 35 ஆயிரத்து, 155 ஓட்டுக்கும் அதிகமாக பெற்றவர்கள்,'டிபாசிட்' பெறலாம்.திருப்பூர் வடக்கு தொகுதியில், இரண்டு லட்சத்து, 36 ஆயிரத்து, 731 பேர் (62.44 சதவீதம்) ஓட்டளித்துள்ளனர். அவர்களில், 39 ஆயிரத்து, 455 ஓட்டுக்கும் அதிகமாக பெற்றவர், 'டிபாசிட்' பெறலாம்.திருப்பூர் தெற்கு தொகுதியில், ஒரு லட்சத்து, 73 ஆயிரத்து, 370 பேர் (62.70 சதவீதம்) ஓட்டளித்துள்ளனர். அவர்களில், 28 ஆயிரத்து, 895 ஓட்டுக்கும் அதிகமாக பெற்றவர் 'டிபாசிட்' பெறலாம் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X