சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆக்சிஜனுடன் படுக்கை வசதி கண்ணீர் விடும் உறவினர்கள்

Added : மே 01, 2021
Share
Advertisement
அன்னூர் : தொற்று உறுதியாகி, மூச்சுத் திணறலுக்கு ஆளாகி, ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை கிடைக்காமல் பலர் தவிக்கின்றனர். அன்னூர் வட்டாரத்தில் தினமும், சராசரியாக 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகிறது. இந்நிலையில் ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை வசதி தேவைப்படும் நோயாளிக்கு, எந்த தனியார் மருத்துவமனையிலும், படுக்கை வசதி இல்லை என புகார் எழுந்துள்ளது.கஞ்சப்பள்ளியை சேர்ந்த

அன்னூர் : தொற்று உறுதியாகி, மூச்சுத் திணறலுக்கு ஆளாகி, ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை கிடைக்காமல் பலர் தவிக்கின்றனர்.

அன்னூர் வட்டாரத்தில் தினமும், சராசரியாக 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகிறது. இந்நிலையில் ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை வசதி தேவைப்படும் நோயாளிக்கு, எந்த தனியார் மருத்துவமனையிலும், படுக்கை வசதி இல்லை என புகார் எழுந்துள்ளது.கஞ்சப்பள்ளியை சேர்ந்த பொறியாளர் ராமகிருஷ்ணன் கூறுகையில், "எனது தந்தைக்கு 75 வயதாகிறது. நான்கு நாட்களுக்கு முன் தொற்று உறுதியானது. கடும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.ஆனாலும் சிரமப்பட்டு வருகிறார்.

எனவே, எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை என கோவையில், 30க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில், கடந்த 3 நாட்களாக நேரில் சென்று கேட்டும் ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை வசதி கிடைக்கவில்லை. மூன்று நாட்கள், நான்கு நாட்கள் கழித்து வாருங்கள். காத்திருப்போர் பட்டியலில் ஏற்கனவே, 150 பேர் உள்ளனர் என்று கூறுகின்றனர்.இதேபோல், அன்னூர் பகுதியில் மேலும் இருவர் தனியார் மருத்துவமனைகளில், ஆக்சிஜன் கூடிய படுக்கை வசதி கிடைக்காமல் தவித்து வருகின்றனர்," என்றார்.நிலைமையின் விபரீதம் இவ்வாறிருக்க, இன்னும் மாஸ்க் அணியாமலும், கைகளை அடிக்கடி கழுவாமலும் பலர் சுற்றித்திரிவது கவலையளிக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X