பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்டேட் வங்கி தேர்வுக்கு அரசு சார்பில் இலவச பயிற்சி

Added : மே 01, 2021
Share
Advertisement
கோவை : பாரத ஸ்டேட் வங்கி பணியிடங்களுக்கான தேர்வுக்கு, இலவசமாக இணையத்தில் பயிற்சி அளிக்க மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவை கலெக்டர் நாகராஜன் வெளியிட்ட அறிக்கை:பாரத ஸ்டேட் வங்கியில் ஜூனியர் அசோசியேட்ஸ் (வாடிக்கையாளர் உதவி மற்றும் விற்பனை) எழுத்தர் நிலை பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தம், 5404 பேருக்கான இந்த காலிப்

கோவை : பாரத ஸ்டேட் வங்கி பணியிடங்களுக்கான தேர்வுக்கு, இலவசமாக இணையத்தில் பயிற்சி அளிக்க மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவை கலெக்டர் நாகராஜன் வெளியிட்ட அறிக்கை:பாரத ஸ்டேட் வங்கியில் ஜூனியர் அசோசியேட்ஸ் (வாடிக்கையாளர் உதவி மற்றும் விற்பனை) எழுத்தர் நிலை பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தம், 5404 பேருக்கான இந்த காலிப் பணியிடங்கள், ஏப்.,27ல் அறிவிக்கப்பட்டன.தமிழகத்தில் மட்டும் 536 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இத்தேர்வுக்கு இளங்கலை பட்டப்படிப்பு முடித்த மனுதாரர்கள், மே 17 வரை http://sbi.co.in மற்றும் https://bank.sbi/careers என்ற இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

முதனிலைத்தேர்வு ஜூன் 2021 மற்றும் முதன்மைத்தேர்வு ஜூலை 31ல் நடக்கிறது. இத்தேர்வில் 4.5 சதவீதம் இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கும், 76 பணியிடங்கள் முன்னாள் ராணுவத்தினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.தேர்வை சிறப்பாக எழுதி வெற்றி பெற வசதியாக, கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம், மே மாதம் இரண்டாம் வாரத்தில் இலவச இணையதள பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாடக்குறிப்புகள் வாட்ஸ்அப் செயலி வாயிலாக வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு, கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தை, 2622388 மற்றும் வாட்ஸ்அப் எண், 94990 55938 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X