பசு வெண்ணெய்யில் சாதத்தை சாப்பிட்டால்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'பசு வெண்ணெய்யில் சாதத்தை சாப்பிட்டால்

Added : மே 01, 2021
Share
''சூடான சாதத்தில் அரை ஸ்பூன் பசு வெண்ணெய்யை சேர்த்து, பிசைந்து சாப்பிட்டால் வயிற்றில் நல்ல பாக்டீரியாக்கள் உருவாகும். வைரஸ் கிருமிகளை எதிர்க்கும் சக்தி கிடைக்கும்.'' என்கிறார் சித்த மருத்துவர் சுசித்ரா. அவர் கூறியதாவது:பூண்டு பல வகையான நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. அதில் ஆன்டி வைரல் சக்தி உள்ளது. நாட்டுப்பூண்டை நல்லெண்ணெய்யில் வதக்கி, தினமும் நான்கு பல்

''சூடான சாதத்தில் அரை ஸ்பூன் பசு வெண்ணெய்யை சேர்த்து, பிசைந்து சாப்பிட்டால் வயிற்றில் நல்ல பாக்டீரியாக்கள் உருவாகும். வைரஸ் கிருமிகளை எதிர்க்கும் சக்தி கிடைக்கும்.'' என்கிறார் சித்த மருத்துவர் சுசித்ரா.

அவர் கூறியதாவது:பூண்டு பல வகையான நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. அதில் ஆன்டி வைரல் சக்தி உள்ளது. நாட்டுப்பூண்டை நல்லெண்ணெய்யில் வதக்கி, தினமும் நான்கு பல் வீதம் மத்திரை போல் சாப்பிட்டு வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.சூடான சாதத்தில், அரை ஸ்பூன் பசு வெண்ணெய்யை சேர்த்து பிசைந்து சாப்பிட்டால், வயிற்றில் நல்ல பாக்டீரியாக்கள் உருவாகும். வைரஸ் கிருமிகளை எதிர்க்கும் சக்தி கிடைக்கும். இதில் விட்டமின் இ சத்து இருப்பதால், நல்ல ஜீரண சக்தி கிடைக்கும்.கசப்பு சுவை உள்ள காய்கள் சாப்பிடுவது நல்லது. குறிப்பாக பாவக்காய், கோவக்காய், சுண்டக்காய் ஆகியற்றுடன் நாட்டு சர்க்கரை சேர்த்து சாப்பிட வேண்டும். கசப்பு சுவை ரத்தத்தை சுத்திகரிக்கும்.

இனிப்பு சுவை ரத்தத்தை விருத்தி செய்யும். இவை இரண்டும் சேரும் போது, உடலில் இயற்கையாக நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும்.ஆயுர்வேத மருந்து கடைகளில் சீந்தில் சூரணம் கிடைக்கிறது. இந்த சூரணத்தை, அரை ஸ்பூன் அளவு எடுத்து, சூடான பாலில் அல்லது தேனில் கலந்து உணவுக்கு பிறகு சாப்பிட வேண்டும். இதனால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன், வெள்ளை அணுக்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.மருத்துவ ஆலோசனைக்கு, 99409 30336 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X