சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தடை மீறி செயல்பட்டதால் 2 சலுான் கடைகளுக்கு 'சீல்'

Added : மே 01, 2021
Share
Advertisement
கோவை : கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, கோவை மாநகராட்சி பகுதியில், சலுான் கடைகள் திறக்க, தடை விதிக்கப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியாக தொழிலாளர்கள் பாதிப்பு ஏற்படும் என்பதால், குறிப்பிட்ட நேரத்துக்கு கடைகளை திறக்க, சலுான் கடை சங்கத்தினர், கலெக்டர் நாகராஜனை சந்தித்து முறையிட்டும் கூட, அனுமதி வழங்கப்படவில்லை.சில இடங்களில், பெரிய சலுான் கடை நடத்துவோர் ஷட்டரை பாதியை

கோவை : கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, கோவை மாநகராட்சி பகுதியில், சலுான் கடைகள் திறக்க, தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார ரீதியாக தொழிலாளர்கள் பாதிப்பு ஏற்படும் என்பதால், குறிப்பிட்ட நேரத்துக்கு கடைகளை திறக்க, சலுான் கடை சங்கத்தினர், கலெக்டர் நாகராஜனை சந்தித்து முறையிட்டும் கூட, அனுமதி வழங்கப்படவில்லை.சில இடங்களில், பெரிய சலுான் கடை நடத்துவோர் ஷட்டரை பாதியை திறந்து வைத்து, வேலை செய்துள்ளனர். சிறிய கடைக்காரர்கள் வருவாயின்றி, தவிப்புக்கு உள்ளாகியிருக்கும் சூழலில், பெரிய கடைக்காரர்கள் மட்டும் விதிமுறையை மீறி திறந்திருந்ததால், அதிருப்தி ஏற்பட்டது.

இதுதொடர்பாக, மாநகராட்சிக்கு தகவல் கொடுத்ததும், சேரன் மாநகர் மற்றும் ராமசாமி நகரில் செயல்பட்ட இரு சலுான்களை, அலுவலர்கள் மூடி, 'சீல்' வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X