பொது செய்தி

தமிழ்நாடு

கடைகளில் விழிப்புணர்வுசுகாதாரத்துறை 'அட்வைஸ்'

Added : மே 01, 2021
Share
Advertisement
அவிநாசி, : 'கொரோனா தொற்று பரவலை தடுக்க, கடைக்காரர்கள் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும்' என, சுகாதார துறையினர் அறிவுறுத்தியுள்ளனர் . 'தொற்றுப்பரவலை தவிர்க்க, ஒவ்வொருவரும் கட்டாயம் முக கவசம் அணிவது அவசியம். சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும்' என தொடர்ந்து அறிவுறுத்தல் வழங்கப்பட்டு வருகிறது. தொற்று பரவலின் முதல் அலையை காட்டிலும், இரண்டாம் அலையின் போது, இந்த

அவிநாசி, : 'கொரோனா தொற்று பரவலை தடுக்க, கடைக்காரர்கள் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும்' என, சுகாதார துறையினர் அறிவுறுத்தியுள்ளனர் .

'தொற்றுப்பரவலை தவிர்க்க, ஒவ்வொருவரும் கட்டாயம் முக கவசம் அணிவது அவசியம். சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும்' என தொடர்ந்து அறிவுறுத்தல் வழங்கப்பட்டு வருகிறது. தொற்று பரவலின் முதல் அலையை காட்டிலும், இரண்டாம் அலையின் போது, இந்த விழிப்புணர்வு கூடுதலாகவே வழங்கப்பட்டு வருகிறது.சுகாதாரத்துறையினர் கூறியதாவது: காய்கறி, மளிகை கடை, இறைச்சி கடைக்கு பொதுமக்கள் செல்லும் போது, கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும். இதை உறுதிப்படுத்துவது, அந்தந்த கடைக்காரர்களின் பொறுப்பு. முக கவசம் அணியாமல் கடைக்கு வருவோரை, கடைக்குள் அனுமதிக்க கூடாது.

தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதில் கடைக்காரர்களுக்கும் பங்குண்டு என்பதை அவர்கள் உணரவேண்டும். சில கடைகளில், முக கவசம் அணிந்து வர வேண்டும். சமூக இடைவெளியுடன் பொருட்களை வாங்க வேண்டும் என, அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். அனைத்து கடைக்காரர்களும் பின்பற்ற வேண்டும். பொதுமக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே, தொற்று தவிர்க்க முடியும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X