சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆந்திராவிலிருந்து தப்பிய1,000 கொரோனா நோயாளிகள்

Added : மே 01, 2021
Share
Advertisement
வேலுார்:ஆந்திராவில் இருந்து தப்பிய, 1,000த்திற்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளை பிடிக்க போலீசார் வேலுாரில் முகாமிட்டுள்ளனர்.ஆந்திர மாநிலம், சித்துார், கடப்பா, திருப்பதியில், மார்ச்சில் 9,123 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதில், 3,400 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். கடந்த வாரம், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்கள் விபரத்தை

வேலுார்:ஆந்திராவில் இருந்து தப்பிய, 1,000த்திற்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளை பிடிக்க போலீசார் வேலுாரில் முகாமிட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலம், சித்துார், கடப்பா, திருப்பதியில், மார்ச்சில் 9,123 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதில், 3,400 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். கடந்த வாரம், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்கள் விபரத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அதில், 1,214 பேர் மாயமானதும், மொபைல், முகவரி போலியானதும் தெரிந்தது. அவர்களை பிடிக்க, ஆந்திர சுகாதார துறை சார்பில், 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. விசாரணையில், ஆந்திர மாநிலம், சித்துார், திருப்பதி, கடப்பாவை சேர்ந்தவர்கள், தங்கள் பெண்களை, வேலுார், ஆம்பூரில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.

இதனால், தங்கள் கணவர், குழந்தைகளோடு அடிக்கடி ஆந்திராவுக்கு பெற்றோர் வீட்டுக்கு சென்று வந்தபோது, கொரோனா பாதித்து, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். சிகிச்சையில் திருப்தி இல்லாததால், அங்கிருந்து தப்பி, வேலுார் சென்றுள்ளனர்.ஆந்திராவில் இருந்து வேலுாரில், பெண் கொடுத்தவர்கள் விபரத்தை வைத்து, தலைமறைவான கொரோனா நோயாளிகளை தனிப்படையினர் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X