நந்திகிராம் யாருக்கு?: திரிணமுல், பா.ஜ., நம்பிக்கை

Updated : மே 02, 2021 | Added : மே 01, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
கோல்கட்டா :மேற்கு வங்க சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ள நிலையில், அனைவரின் பார்வையும், முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும், நந்திகிராம் தொகுதியின் மீது திரும்பியுள்ளது. 'கண்டிப்பாக, எங்களுக்கே வெற்றி கிடைக்கும்' என, ஆளும் திரிணமுல் காங்கிரசும், எதிர்க்கட்சியான, பா.ஜ.,வும் நம்பிக்கையுடன் உள்ளன. மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான,
 நந்திகிராம் தொகுதி, யாருக்கு?  திரிணமுல், பா.ஜ., நம்பிக்கை

கோல்கட்டா :மேற்கு வங்க சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ள நிலையில், அனைவரின் பார்வையும், முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும், நந்திகிராம் தொகுதியின் மீது திரும்பியுள்ளது. 'கண்டிப்பாக, எங்களுக்கே வெற்றி கிடைக்கும்' என, ஆளும் திரிணமுல் காங்கிரசும், எதிர்க்கட்சியான, பா.ஜ.,வும் நம்பிக்கையுடன் உள்ளன.

மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இந்த மாநில சட்டசபைக்கு, எட்டு கட்டங்களாக தேர்தல் நடந்தது. ஓட்டு எண்ணிக்கை இன்று நடக்கிறது.இங்கு, 2016ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், மூன்று தொகுதிகளை மட்டுமே பெற்ற பா.ஜ., இம்முறை, ஆளும் திரிணமுல் காங்கிரசுக்கு கடும் சவாலை கொடுத்து உள்ளது.

திரிணமுல் - பா.ஜ., இடையே தான் கடும் போட்டி நிலவியது.அதிக முக்கியத்துவம் பெற்றுள்ள தொகுதியாக, கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டம், நந்திகிராம் உள்ளது. இந்த தொகுதியில், முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிட்டார். பா.ஜ., சார்பில், மாநில முன்னாள் அமைச்சரும், ஒரு காலத்தில், மம்தாவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவருமான சுவேந்து அதிகாரி போட்டியிட்டுள்ளார்.

நந்திகிராம் தொகுதி, இடதுசாரிகளின் கோட்டையாக இருந்தது ஒரு காலம். ஆனால், 2009லிருந்து, இது திரிணமுல் காங்கிரசின் கோட்டையாக மாறியது. இந்த தொகுதியில், 2009ல் நடந்த இடைத்தேர்தலில், திரிணமுல் முதல் முறையாக வெற்றி பெற்றது. அதன்பின், 2011 மற்றும் 2016லும், திரிணமுல் அமோக வெற்றி பெற்றது.

லோக்சபாவுக்கு, 2019ல் நடந்த தேர்தலில், நந்திகிராம் இடம் பெற்றுள்ள தம்லுக் தொகுதியில், திரிணமுல் சார்பில் போட்டியிட்ட சுவேந்து அதிகாரியின் சகோதரர் திபேந்து அதிகாரி, 50 சதவீதத்துக்கு மேல் ஓட்டுகள் பெற்று, வெற்றி பெற்றார். பா.ஜ., 36 சதவீத ஓட்டுகள் பெற்று, இரண்டாம் இடம் பிடித்தது.

இந்நிலையில் தான், நந்திகிராம் தொகுதியில், மம்தா மீண்டும் போட்டியிட்டுள்ளார். இந்த தொகுதி, அதிகாரி குடும்பத்தினருக்கு செல்வாக்கு மிக்கதாக கருதப்படுகிறது. ஒட்டு மொத்த சட்டசபை தேர்தல் முடிவுகளை விட, இந்த தொகுதியின் முடிவைத் தான், மாநில மக்கள் மட்டுமின்றி, நாடு முழுதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஹிந்துக்களின் ஓட்டுகளை நம்பி, பா.ஜ.,வும், முஸ்லிம்களின் ஓட்டு களை நம்பி, திரிணமுல் காங்கிரசும் இறங்கி உள்ளன.

இந்த தொகுதியில் வெற்றி பெறுவதை, தனிப்பட்ட கவுரவமாக மம்தாவும், சுவேந்து அதிகாரியும் கருதுகின்றனர். மாநிலத்தில், திரிணமுல் காங்கிரஸ், மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைக்கும் என்றும், திரிணமுல் - பா.ஜ., இடையே கடும் போட்டி நிலவும் என்றும், பா.ஜ., ஆட்சி அமைக்கும் என்றும், பல்வேறு கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன.'மாநிலத்தில் இம்முறை ஆட்சி மாற்றம் நிச்சயம். நாங்கள் ஆட்சி அமைப்போம்; நந்திகிராமில் மம்தா தோற்பது உறுதியாகிவிட்டது' என, பா.ஜ., தலைவர்கள் கூறியுள்ளனர். முடிவு என்ன என்பது, இன்று மாலைக்குள் தெரிந்து விடும்.




ஆட்சி மாற்றம் நடக்குமா?



கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, ஆளும் இடது ஜனநாயக முன்னணியும், அசாமில், ஆளும், பா.ஜ.,வும், ஆட்சியை தக்க வைக்கும் என, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.ஆனாலும், 'கேரளாவில், ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை, ஆட்சி மாற்றம் நடப்பது வழக்கம்; அதனால், நாங்கள் தான் வெற்றி பெறுவோம்' என, காங்கிரஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளது. 'ஆட்சியை தக்க வைப்பது உறுதி' என, இடதுசாரி தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.அசாமில், 'ஆட்சியை தக்க வைப்போம்' என, பா.ஜ., தலைவர்கள் கூறுகின்றனர். 'எங்கள் தலைமையில் ஆட்சி அமையும்' என, காங்கிரஸ் தலைவர்களும் கூறியுள்னனர். இரண்டு மாநிலங்களிலும், இப்போதுள்ள அரசே தொடருமா, புதிய அரசு அமையுமா என்பது, இன்று தெரியும்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் ,இந்தியா
02-மே-202110:00:46 IST Report Abuse
Nallavan Nallavan நந்திகிராமில் முமைதா பேகம் ஜெயிக்கணும். ஆனா பாஜக ஆட்சி அமைக்கணும். முமைதாவின் சுயரூபம் மேலும் மக்களுக்கு புரியவரும் .........
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
02-மே-202107:36:31 IST Report Abuse
blocked user மமதா காங்கிரசுடன் கூட்டு வைக்கவேண்டியது காலத்தின் கட்டாயம். பாஜக அரசு முதல் முதலாக டிஸ்மிஸ் செய்யப்போகும் மாநில அரசாக இருக்கப்போகிறது என்றுதான் நினைக்கிறேன்.
Rate this:
Cancel
Palanisamy Sekar - Jurong-West,சிங்கப்பூர்
02-மே-202107:32:53 IST Report Abuse
Palanisamy Sekar தேசப்பற்றுள்ள கட்சி எதுவாயினும் ஜெயிக்கணும். சீனாவை பார்ன்ன்னு சொல்ற கட்சிகள் ஒழியனும். அந்நிய தேசத்திலிருந்து வந்த நபர்கள் தலைமையில் உள்ள கட்சி மிக ஆபத்தானவை. அக்கட்சியும் இல்லாமல் போகணும். இதுதாங்க நம்ம நல்ல மனசுல தோன்றது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X