பொது செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கிலும் உன்னத அரங்கேற்றம்!

Added : மே 01, 2021
Share
Advertisement
நடனத்தில் எத்தனை புதுமைகள் வந்தாலும், பாரம்பரிய நடனத்துக்கு இருக்கும் மவுசு குறையாது. தற்போது ஊரடங்கால், அரங்கேற்றம் எதுவும் இல்லாமல் நாட்டிய பள்ளிகள் வெறிச்சோடி கிடக்கின்றன. இந்த சூழலிலும், ஆன்லைன் மூலம் அசத்தல் அரங்கேற்றத்தை நிகழ்த்தி காட்டியுள்ளது திருப்பூர் சாய்கிருஷ்ணா நுண்கலை கூடம். இக்கலைக்கூடத்தின் மாணவியான தனவர்ஷினியின் (9ம் வகுப்பு) ஆடல் நிகழ்ச்சி,

நடனத்தில் எத்தனை புதுமைகள் வந்தாலும், பாரம்பரிய நடனத்துக்கு இருக்கும் மவுசு குறையாது. தற்போது ஊரடங்கால், அரங்கேற்றம் எதுவும் இல்லாமல் நாட்டிய பள்ளிகள் வெறிச்சோடி கிடக்கின்றன. இந்த சூழலிலும், ஆன்லைன் மூலம் அசத்தல் அரங்கேற்றத்தை நிகழ்த்தி காட்டியுள்ளது திருப்பூர் சாய்கிருஷ்ணா நுண்கலை கூடம்.

இக்கலைக்கூடத்தின் மாணவியான தனவர்ஷினியின் (9ம் வகுப்பு) ஆடல் நிகழ்ச்சி, திருப்பூர், சுல்தான் பேட்டை, அம்மன் கலையரங்கில் நடக்க, யுடியூப் சேனல் வழியாக நேரடி ஒளிபரப்பானது. 'ஆடல் அரசனின் வைபவம்' எனும் தலைப்பிற்கேற்ப சிவபெருமானின் பெருமைகளை நடனத்தில் மூலம் வெளிப்படுத்தினார். புஷ்பாஞ்சலியில் துவங்கிய நடனம், அலாரிப்பு, ஜதீஸ்வரம், வர்ணம், கீர்த்தனம், தேவாரம், தில்லானா வரை நடந்தது.போழக்குடி பிரவீன் மற்றும் இசைக்குழுவினர் நேரடி இசைக்கருவிகளை வாசிக்க, தாளத்திற்கேற்ப ஆடி அசத்தினார். தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் உள்ள நாட்டிய பள்ளி மாணவர்களும், நேரடியாக கண்டுகளித்தனர்.

பேஸ்புக் மூலமாக, 400 பேர் பார்வையிட்டு, உடனுக்குடன் கமென்ட்களை குவித்தனர். சென்னை ஸ்ரீதேவி நிருத்யாலயா நிறுவனர் ஷீலா உன்னிகிருஷ்ணன், குருதியாகராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்க, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டுகளித்தனர்.சாய்கிருஷ்ணா நுண்கலை கூட நிறுவனர் சங்கர் கூறுகையில், ''பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வர முடியாத நிலையில் உள்ளனர். கோவில்களும் மூடப்பட்டுள்ளன.கலையரங்கில், 100 பேர் மட்டுமே அனுமதி என்பதால், ஆன்லைன் மூலம் அரங்கேற்றம் நடத்தப்பட்டது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X