பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தை தொழிலாளர் தொடர்ந்து அதிகரிப்பு

Added : மே 01, 2021
Share
Advertisement
பல்லடம் : அரசு பள்ளிகளில் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் நடுத்தர மற்றும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர். வேலைக்கு சென்றாவது பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் என்ற மன நிலையில் பெற்றோர்கள் உள்ளனர். கொரோனா தாக்கம் காரணமாக, கூலி தொழிலாளர்கள் முதல், தொழிலதிபர்கள் வரை பலரும் பாதிக்கப்பட்டனர்.பள்ளிக்கும் செல்ல முடியாமல் வீட்டில் முடங்கி கிடப்பதால் பயன்

பல்லடம் : அரசு பள்ளிகளில் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் நடுத்தர மற்றும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர்.

வேலைக்கு சென்றாவது பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் என்ற மன நிலையில் பெற்றோர்கள் உள்ளனர். கொரோனா தாக்கம் காரணமாக, கூலி தொழிலாளர்கள் முதல், தொழிலதிபர்கள் வரை பலரும் பாதிக்கப்பட்டனர்.பள்ளிக்கும் செல்ல முடியாமல் வீட்டில் முடங்கி கிடப்பதால் பயன் ஒன்றும் இல்லை என, கொரோனாவால் வருமானம் இழந்த தொழிலாளர் குடும்பங்கள், தங்களது பிள்ளைகளையும் வேலைக்கு அழைத்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இதனால், பள்ளி செல்லும் வயதுடைய மாணவர்களும், மண் வெட்டி, கடப்பாரையை கையில் எடுக்க வேண்டிய சூழலுக்கு ஆளாகியுள்ளனர்.குழந்தை தொழிலாளரை பணிக்கு அமர்த்த கூடாது என்ற சட்டம் உள்ளபோதும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் இதை விட்டால் வேறு வழி இல்லை என்ற மனநிலைக்கு மாறியுள்ளனர். இதனால், குழந்தை தொழிலாளர் மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X