பொது செய்தி

தமிழ்நாடு

'கோவை - பாலக்காடு ரயில் வேகம் கண்காணிக்க கருவிகள் இல்லை'

Added : மே 01, 2021
Share
Advertisement
கோவை : 'கோவை - பாலக்காடு ரயில் வழிதட ரயில்களின் வேகத்தை கண்காணிக்க எவ்வித கருவியும் பொருத்தப்படவில்லை' என்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. கோவை - பாலக்காடு ரயில் பாதை, தமிழகம் மற்றும் கேரள மாநில வனப்பகுதி வழியாக செல்கிறது. தினமும், பகலில், 75 முதல், 80 ரயில்களும், இரவில், 35 - 40 ரயில்களும் இவ்வழித் தடத்த்தை பயன்படுத்துகின்றன.இந்த ரயில் பாதையில் 2002 -

கோவை : 'கோவை - பாலக்காடு ரயில் வழிதட ரயில்களின் வேகத்தை கண்காணிக்க எவ்வித கருவியும் பொருத்தப்படவில்லை' என்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

கோவை - பாலக்காடு ரயில் பாதை, தமிழகம் மற்றும் கேரள மாநில வனப்பகுதி வழியாக செல்கிறது. தினமும், பகலில், 75 முதல், 80 ரயில்களும், இரவில், 35 - 40 ரயில்களும் இவ்வழித் தடத்த்தை பயன்படுத்துகின்றன.இந்த ரயில் பாதையில் 2002 - 2010 வரை, 13 யானைகளும், 2016 - தற்போது வரை எட்டு யானைகளும் ரயில் மோதி இறந்தன. இவ்வழித்தடத்தில் ரயில்கள் இயக்கம் குறித்து, தென்காசியை சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி எழுப்பி இருந்தார்.

பாலக்காடு ரயில்வே கோட்ட அதிகாரி ஜெயகிருஷ்ணன் அளித்த பதிலில்,'கோவை - பாலக்காடு ரயில்வே வழித்தடத்தில் இரவில் ரயில்களின் வேகம், 45 கி.மீ., பகலில் ரயில்களின் வேகம், 65 கி.மீ., என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரயில் மோதி யானைகள் இறந்தது குறித்து, எந்த நடவடிக்கையும் யார் மீதும் எடுக்கப்படவில்லை. கடந்த, 10 ஆண்டுகளில் யானைகள் மீது மோதியதில் ரயில் இன்ஜினுக்கோ, பெட்டிகளுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. ரயில் இன்ஜின் குறிப்பிட்ட வேக வரம்பைத் தாண்டி இயங்கினால், உடனே நிறுத்துவதற்கு தானியங்கி அவசர நிறுத்தும் வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை. வேகக்கட்டுப்பாட்டு கருவி ரயில் இன்ஜினில் பொருத்தப்படவில்லை' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாண்டியராஜா கூறுகையில்,''விபத்துக்கள் பெரும்பாலும் இரவு 10:00 முதல் அதிகாலை 4:00 மணி வரை நடந்துள்ளன. வேகக்கட்டுப்பாட்டு கருவிகள் எதுவும் இல்லாத நிலையில் ரயில்கள் வேகமாக இயக்கப்படுவதை தடுக்க முடியாது. அப்படியிருக்கும்போது ரயில்கள் யானைகள் மீது மோதுவதை தடுக்கவும் முடியாது. ரயில்களின் வேகம் குறித்து முறையாக கண்காணிக்க வேண்டும். வளைவுகளில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேம்படுத்த வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X