பொது செய்தி

தமிழ்நாடு

எளிமையாக நடந்த மே தின கொண்டாட்டம்

Added : மே 01, 2021
Share
Advertisement
திருப்பூர், : திருப்பூர் மாவட்டத்தில் மே தினம் எளிமையான முறையில் நடந்தது.திருப்பூர் அவிநாசி ரோட்டில் உள்ள மா.கம்யூ., கட்சி மாவட்ட அலுவலகத்தில் மாநில குழு உறுப்பினர் காமராஜ் கொடியேற்றி வைத்தார். சி.ஐ.டி.யு., மாநில துணை தலைவர் சந்திரன், மாவட்ட செயலாளர் முத்துகண்ணன் ஆகியோர் பங்கேற்றனர். மாவட்டம் முழுவதும், நுாறு மையங்களில் நடந்தது. இந்திய கம்யூ., கட்சி சார்பில்,

திருப்பூர், : திருப்பூர் மாவட்டத்தில் மே தினம் எளிமையான முறையில் நடந்தது.திருப்பூர் அவிநாசி ரோட்டில் உள்ள மா.கம்யூ., கட்சி மாவட்ட அலுவலகத்தில் மாநில குழு உறுப்பினர் காமராஜ் கொடியேற்றி வைத்தார்.

சி.ஐ.டி.யு., மாநில துணை தலைவர் சந்திரன், மாவட்ட செயலாளர் முத்துகண்ணன் ஆகியோர் பங்கேற்றனர். மாவட்டம் முழுவதும், நுாறு மையங்களில் நடந்தது. இந்திய கம்யூ., கட்சி சார்பில், திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் எம்.பி., சுப்பராயன் தலைமையில் கொடியேற்றப்பட்டது. பி.என்., ரோட்டில் உள்ள பனியன் பேக்டரி லேபர் யூனியன் சங்க அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் ரவி கொடியேற்றி வைத்தார். மாவட்டம் முழுவதும், இந்திய கம்யூ., சார்பில், 42 இடங்களில், ஏ.ஐ.டி.யு.சி., சார்பில், 10 இடங்களில் மே தினம் கொண்டாடப்பட்டது.

 திருப்பூர் பி.என்.ரோடு மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் தொ.மு.ச., மின் ஊழியர் சங்கம் சார்பில் மே தினம் முன்னிட்டு கொடியேற்று விழா நடந்தது. வடக்கு நகர செயலாளர் தினேஷ்குமார் கொடியேற்றினார். மாநில தொ.மு.ச., துணை செயலாளர் நாகராஜ், தொழிற்சங்க மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. திருப்பூரில் இயங்கும் ஸ்ரீமகா சக்தி அறக்கட்டளை சார்பில் ஈஸ்வரன் கோவில் வீதியில், மே தினம் முன்னிட்டு தொழிலாளர்களுக்கு உடைகள் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.தெற்கு போலீஸ் உதவி கமிஷனர் நவீன்குமார் இதை துவக்கி வைத்தார். அறக்கட்டளை நிர்வாகிகள் மகாலட்சுமி குளோபல் பூபதி, பாலச்சந்திரன், செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X