பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்களுக்கு கற்பிக்க ஆசிரியர்களுக்கு புது 'டாஸ்க்'

Added : மே 01, 2021
Share
Advertisement
திருப்பூர் : அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை ஆசிரியர்களை வீட்டில் இருந்தே பணியாற்றும்படி பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி சேனல், இ-புத்தகம், கல்வி இணைய தளம் மூலம் பாடங்களை படிக்க அரசு வசதி செய்து கொடுத்தது. தனியார் பள்ளி மாணவர்களுக்கு 'வீடியோ கால்' வடிவில் ஆசிரியரின் நேரடி கவனிப்பை பெற முடிவதில்லை.அரசு பள்ளி மாணவர் களுக்கு,

திருப்பூர் : அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை ஆசிரியர்களை வீட்டில் இருந்தே பணியாற்றும்படி பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி சேனல், இ-புத்தகம், கல்வி இணைய தளம் மூலம் பாடங்களை படிக்க அரசு வசதி செய்து கொடுத்தது. தனியார் பள்ளி மாணவர்களுக்கு 'வீடியோ கால்' வடிவில் ஆசிரியரின் நேரடி கவனிப்பை பெற முடிவதில்லை.அரசு பள்ளி மாணவர் களுக்கு, 'வீடியோகால்' மூலமாக இல்லை எனிலும், 'வாட்ஸ்அப்' மூலமாக கற்பித்தலை வீட்டில் இருந்தே மேற்கொள்ளலாம் என கல்வித்துறை தெரிவித்துள்ளது.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனுப்பிய வழிகாட்டு நெறிமுறையில், 'ஆசிரியர்கள் வகுப்புக்கு ஒரு வாட்ஸ்அப் குழு உருவாக்கி, தினசரி மாணவர்களுக்கு கற்பித்தல் சார்ந்த 'டெஸ்ட்' வைக்க வேண்டும்.

ஆறு முதல் ஒன்பது வகுப்பு மாணவர்களுக்கு இணைப்பு பாட புத்தகம், பயிற்சி கட்டகங்கள் வழங்கப்பட்டுள்ளன. மாணவர்களை தினமும் இதில் பயிற்சி எடுக்கவைத்து, பயிற்சி கட்டகத்தை புகைப்படத்தை அனுப்ப சொல்லி ஆசிரியர்கள் உறுதிபடுத்த வேண்டும்.பிளஸ் 2 மாணவர்களை பொதுத்தேர்வு தயார்படுத்தும் வகையில், அவர்களுக்கு வீட்டில் இருந்தே, 'யூனிட்' வாரியாக, தேர்வு நடத்தி விடைத்தாளை ஆன்லைனில் பகிர சொல்லி மதிப்பீடு செய்ய வேண்டும். முக்கிய வினாக்கள், பாடங்களை மாணவர்களுக்கு எடுத்துரைத்து, தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் வகையில், பயிற்சி அளிப்பது அவசியம்' என, குறிப்பிட்டிருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X