அரசியல் செய்தி

தமிழ்நாடு

கமலுக்கு களம் புதிது: கோவை தெற்கு யாருக்கு?

Added : மே 01, 2021
Share
Advertisement
கோவை, : முதல் முறையாக, தேர்தல் களம் கண்டுள்ள கமல், வெல்வாரா என்பது இன்று தெரியும்.கோவை தெற்கு தொகுதியில், அ.தி.மு.க., கூட்டணியில் பா.ஜ., தேசிய மகளிரணி செயலாளர் வானதி சீனிவாசன், தி.மு.க., கூட்டணியில் காங்., மாநில நிர்வாகி மயூரா ஜெயக்குமார் போட்டியிட்டுள்ளனர். இவர்களுக்கு மத்தியில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் களமிறங்கியதால், தெற்கு தொகுதி ஸ்டார் அந்தஸ்து பெற்றது.வேட்பு

கோவை, : முதல் முறையாக, தேர்தல் களம் கண்டுள்ள கமல், வெல்வாரா என்பது இன்று தெரியும்.கோவை தெற்கு தொகுதியில், அ.தி.மு.க., கூட்டணியில் பா.ஜ., தேசிய மகளிரணி செயலாளர் வானதி சீனிவாசன், தி.மு.க., கூட்டணியில் காங்., மாநில நிர்வாகி மயூரா ஜெயக்குமார் போட்டியிட்டுள்ளனர்.

இவர்களுக்கு மத்தியில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் களமிறங்கியதால், தெற்கு தொகுதி ஸ்டார் அந்தஸ்து பெற்றது.வேட்பு மனு தாக்கல் செய்தது முதல் ஓட்டுப்பதிவு வரை, கோவையிலேயே முகாமிட்டு, தெருத்தெருவாக தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அனைத்து சமுதாயத்தினரையும் சந்தித்தார். நாத்திக கொள்கையை தள்ளி வைத்து விட்டு, ஆதீனங்களை யும், சிறுபான்மையினரையும் சந்தித்து ஆதரவு கோரினார். அவரது பிரசாரம், அணுகுமுறை பல தரப்பிலும் கவனத்தை ஈர்த்தது.

தற்போது, 1,53,473 ஓட்டுகளே பதிவாகி இருக்கின்றன. இதோடு, தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ராணுவ வீரர்கள், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள், கொரோனா நோயாளிகள் அளித்த தபால் ஓட்டுகளை சேர்த்தால், சில ஆயிரம் ஓட்டுகளே கூடுதலாகும்.கடந்த, 2016 சட்டசபை தேர்தலிலும், 1,53,533 ஓட்டுகளே பதிவாகி இருந்தன. இப்போதைய தேர்தலில், சில ஆயிரம் ஓட்டுகளே கூடுதலாக பதிவாகி இருப்பதாலும், நடுநிலை வாக்காளர்கள், முதல்முறை ஓட்டுப்போடுபவர்கள், இளம் வாக்காளர்கள் அதிகமாக ஓட்டுப்பதிவு செய்திருப்பதாலும், வெற்றி யாருக்கு என்பதை கணிக்க முடியாத சூழல் காணப்படுகிறது.

தேர்தல் களம் கமலுக்கு புதிது. முதல் முறையாக, அனைத்து மத மற்றும் கலவையாக அனைத்து ஜாதியினரும் வசிக்கும் தொகுதியில், துணிச்சலாக களமிறங்கியிருக்கிறார். இரு தேசிய கட்சிகளுக்கு இடையே போட்டியிட்டுள்ள அவர், வெல்வாரா என்பதற்கான விடை, இன்றைய தினம் தெரியும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X