தேர்தல் முடிவல்ல; புதிய அனுபவம்: கமல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தேர்தல் முடிவல்ல; புதிய அனுபவம்: கமல்

Updated : மே 01, 2021 | Added : மே 01, 2021 | கருத்துகள் (9)
Share
சென்னை :'வெற்றி எனில் கொண்டாடத் தேவை இல்லை; தோல்வி எனில், துவள வேண்டியதில்லை; எதுவரினும் மக்கள் பணிகளைத் தொடருங்கள்' என, தன் கட்சி உறுப்பினர்களுக்கு, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் அறிவுறுத்தியுள்ளார்.தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதம்:தேர்தல் முடிவுகளுக்காக, ஆவலோடு காத்திருப்பீர்கள். ஆர்வ மிகுதியில், உங்கள் பாதுகாப்பை மறந்து விடக்கூடாது. ஓட்டு எண்ணும்
தேர்தல் முடிவல்ல; புதிய அனுபவம் , கமல்

சென்னை :'வெற்றி எனில் கொண்டாடத் தேவை இல்லை; தோல்வி எனில், துவள வேண்டியதில்லை; எதுவரினும் மக்கள் பணிகளைத் தொடருங்கள்' என, தன் கட்சி உறுப்பினர்களுக்கு, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் அறிவுறுத்தியுள்ளார்.

தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதம்:தேர்தல் முடிவுகளுக்காக, ஆவலோடு காத்திருப்பீர்கள். ஆர்வ மிகுதியில், உங்கள் பாதுகாப்பை மறந்து விடக்கூடாது. ஓட்டு எண்ணும் மையங்களில் கூட்டம் கூட வேண்டியதில்லை. அங்கீகரிக்கப்பட்ட முகவர்களை தவிர மற்றவர்கள், ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றி, வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.தேர்தல் முடிவுகளை விட உங்களுடைய பாதுகாப்பும், உங்கள் குடும்பத்தாரின் பாதுகாப்புமே எனக்கு முக்கியம். தேர்தல் என்பது முடிவல்ல. மக்கள் பணியில் முடிவென்பது கிடையாது. இந்த தேர்தல், நமக்கு ஒரு புதிய அனுபவம்; புதிய துவக்கம்.

இந்த தேர்தல் பயணத்தில், மக்களுக்கு நம் மீதுள்ள நம்பிக்கையை உணர்ந்து இருக்கிறோம். மக்கள் அன்பே நம் பலம். மக்கள் நலனே எதைக் காட்டிலும் முதன்மையானது.வெற்றி எனில், கொண்டாடத் தேவை இல்லை; தோல்வி எனில் துவள வேண்டியதில்லை; எதுவரினும் மக்கள் பணிகளைத் தொடருங்கள். இந்த இக்கட்டான சூழலில் பாதிக்கப்பட்டு இருப்போருக்கு, அனைத்து உதவிகளையும் செய்யுங்கள். நீங்கள் நல்ல முறையில் செயல்பட்டுக் கொண்டிருப்பதை, அன்றாடம் வரும் அறிக்கைகள் வாயிலாக அறிகிறேன். உங்களை நினைத்து பெருமிதம் கொள்கிறேன்.மக்களுக்காக, மக்களுடன் களத்தில் நிற்போம். நாளை நமதே!இவ்வாறு கமல் கூறியுள்ளார்.கமலுக்கு களம் புதிது


முதல் முறையாக, தேர்தல் களம் கண்டுள்ள கமல், வெல்வாரா என்பது இன்று தெரியும்.
கோவை தெற்கு தொகுதியில், அ.தி.மு.க., கூட்டணியில் பா.ஜ., தேசிய மகளிரணி செயலாளர் வானதி சீனிவாசன், தி.மு.க., கூட்டணியில் காங்., மாநில நிர்வாகி மயூரா ஜெயக்குமார் போட்டியிட்டுள்ளனர். இவர்களுக்கு மத்தியில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் களமிறங்கியதால், தெற்கு தொகுதி ஸ்டார் அந்தஸ்து பெற்றது.

வேட்பு மனு தாக்கல் செய்தது முதல் ஓட்டுப்பதிவு வரை, கோவையிலேயே முகாமிட்டு, தெருத்தெருவாக தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அனைத்து சமுதாயத்தினரையும் சந்தித்தார். நாத்திக கொள்கையை தள்ளி வைத்து விட்டு, ஆதீனங்களையும், சிறுபான்மையினரையும் சந்தித்து ஆதரவு கோரினார். அவரது பிரசாரம், அணுகுமுறை பல தரப்பிலும் கவனத்தை ஈர்த்தது.

தற்போது, 1,53,473 ஓட்டுகளே பதிவாகி இருக்கின்றன. இதோடு, தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ராணுவ வீரர்கள், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், கொரோனா நோயாளிகள் அளித்த தபால் ஓட்டுகளை சேர்த்தால், சில ஆயிரம் ஓட்டுகளே கூடுதலாகும்.கடந்த, 2016 சட்டசபை தேர்தலிலும், 1,53,533 ஓட்டுகளே பதிவாகி இருந்தன. இப்போதைய தேர்தலில், சில ஆயிரம் ஓட்டுகளே கூடுதலாக பதிவாகி இருப்பதாலும், நடுநிலை வாக்காளர்கள், முதல்முறை ஓட்டுப்போடுபவர்கள், இளம் வாக்காளர்கள் அதிகமாக ஓட்டுப்பதிவு செய்திருப்பதாலும், வெற்றி யாருக்கு என்பதை கணிக்க முடியாத சூழல் காணப்படுகிறது.

தேர்தல் களம் கமலுக்கு புதிது. முதல் முறையாக, அனைத்து மத மற்றும் கலவையாக அனைத்து ஜாதியினரும் வசிக்கும் தொகுதியில், துணிச்சலாக களமிறங்கியிருக்கிறார். இரு தேசிய கட்சிகளுக்கு இடையே போட்டியிட்டுள்ள அவர், வெல்வாரா என்பதற்கான விடை, இன்றைய தினம் தெரியும்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X