பொது செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்திகள்...

Added : மே 01, 2021
Share
Advertisement
பருத்தி ரூ.1.37 கோடி வர்த்தகம்மூலனூர் வேளாண் விற்பனை கூடத்தில் நேற்று முன்தினம் நடந்த பருத்தி ஏலத்துக்கு, 2,349 குவிண்டால் வரத்து வந்தது. மொத்தம் ஒரு கோடியே 36 லட்சத்து 53 ஆயிரத்து 137 ரூபாய்க்கு விற்பனையானது. இதில், முதல் தர பருத்தி ஒரு குவிண்டால் 7,569 ரூபாய், இரண்டாம் தரம், 4,800 ரூபாய், சராசரியாக 6,500 ரூபாய்க்கும் விற்பனையானது. 1,053 விவசாயிகள், 25 வியாபாரிகள் பங்கேற்று பயனடைந்தனர்.மது

பருத்தி ரூ.1.37 கோடி வர்த்தகம்மூலனூர் வேளாண் விற்பனை கூடத்தில் நேற்று முன்தினம் நடந்த பருத்தி ஏலத்துக்கு, 2,349 குவிண்டால் வரத்து வந்தது. மொத்தம் ஒரு கோடியே 36 லட்சத்து 53 ஆயிரத்து 137 ரூபாய்க்கு விற்பனையானது. இதில், முதல் தர பருத்தி ஒரு குவிண்டால் 7,569 ரூபாய், இரண்டாம் தரம், 4,800 ரூபாய், சராசரியாக 6,500 ரூபாய்க்கும் விற்பனையானது. 1,053 விவசாயிகள், 25 வியாபாரிகள் பங்கேற்று பயனடைந்தனர்.மது கடத்தல்2 பேர் கைதுபெருமாநல்லுார் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் தலைமையில் போலீசார் வாவிபாளையம் செல்லும் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டதில், 240 மதுபாட்டில் இருந்தது. ஆட்டோவில் வந்த, வாஷிங்டன் நகரை சேர்ந்த வெங்கடேஷ், 27, பெருமாநல்லுாரை சேர்ந்த இசக்கிமுத்து,25, என்பதும், 2 நாள் மதுக்கடை விடுமுறை என்பதால், மது விற்க வாங்கி சென்றதும் தெரிய வந்தது. மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X