சம்பவம் செய்தி

தமிழ்நாடு

116 முகவர், 11 அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி

Added : மே 01, 2021
Share
Advertisement
கோவை : கோவையில் ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபட இருந்த, 11 அதிகாரிகள், 116 முகவர்களுக்கு, 'கொரோனா' தொற்று இருப்பது நேற்று உறுதியானது. அவர்கள், தனிமைப்படுத்தப்பட்டனர். கோவை மாவட்டத்தில் பதிவான ஓட்டுகள், ஜி.சி.டி., கல்லுாரி வளாகத்தில் இன்று காலை, 8:00 மணி முதல் எண்ணப்படுகின்றன. ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், அதிகாரிகள், அரசியல் கட்சி முகவர்கள் அனைவருக்கும் நேற்று

கோவை : கோவையில் ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபட இருந்த, 11 அதிகாரிகள், 116 முகவர்களுக்கு, 'கொரோனா' தொற்று இருப்பது நேற்று உறுதியானது. அவர்கள், தனிமைப்படுத்தப்பட்டனர்.

கோவை மாவட்டத்தில் பதிவான ஓட்டுகள், ஜி.சி.டி., கல்லுாரி வளாகத்தில் இன்று காலை, 8:00 மணி முதல் எண்ணப்படுகின்றன. ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், அதிகாரிகள், அரசியல் கட்சி முகவர்கள் அனைவருக்கும் நேற்று முன்தினம், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில், 340 பேருக்கும், கலெக்டர் அலுவலகத்தில், 360 பேருக்கும் சளி மாதிரி சேகரிக்கப்பட்டது. இதில், 11 அதிகாரிகளுக்கு தொற்று இருப்பது நேற்று உறுதியானது. ஓட்டு எண்ணும் பணியில் இருந்து அவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட்டனர்.

20 சதவீத அலுவலர்கள் இருப்பு வைத்திருப்பதால், அவர்கள் நியமிக்கப்பட்டனர்.இதேபோல், அரசியல் கட்சி முகவர்களில், 3,208 பேருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில், 116 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டு, அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பூத் வாரியாக ஓட்டுப்பதிவு நிலவரம் அறிய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதால், கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.செய்தி சேகரிக்கச் செல்லும் பத்திரிகை நிருபர்கள், போட்டோகிராபர்கள், வீடியோகிராபர்கள், செய்தி - மக்கள் தொடர்பு ஊழியர்கள் என, 210 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில், மூன்று நிருபர்கள் மற்றும் மூன்று ஊழியர்களுக்கு தொற்று உறுதியானதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X