பொது செய்தி

தமிழ்நாடு

100 நாள் வேலை 150 நாளாக உயருமா? புதிய அரசிடம் தொழிலாளர் எதிர்பார்ப்பு

Added : மே 01, 2021
Share
Advertisement
திருப்பூர் : நுாறு நாள் திட்ட தொழிலாளர்கள், புதிய அரசு பொறுப்பேற்றால், தங்களுக்கு 150 நாள் வேலை வழங்கப்படும் என்ற நம்பிக்கையுடன் உள்ளனர். கொரோனா முதல் அலையின்போது, கிராமப்புற தொழிலாளர்கள் பலரது வாழ்வாதாரத்துக்கு, தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம்தான்(நுாறு நாள் வேலை திட்டம்) கைகொடுத்தது. திருப்பூர் மாவட்டத்தில், இது பெரிதும் கைகொடுத்தது.கொரோனா பரவலால், தற்போது,

திருப்பூர் : நுாறு நாள் திட்ட தொழிலாளர்கள், புதிய அரசு பொறுப்பேற்றால், தங்களுக்கு 150 நாள் வேலை வழங்கப்படும் என்ற நம்பிக்கையுடன் உள்ளனர்.

கொரோனா முதல் அலையின்போது, கிராமப்புற தொழிலாளர்கள் பலரது வாழ்வாதாரத்துக்கு, தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம்தான்(நுாறு நாள் வேலை திட்டம்) கைகொடுத்தது. திருப்பூர் மாவட்டத்தில், இது பெரிதும் கைகொடுத்தது.கொரோனா பரவலால், தற்போது, இரவு நேரம் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், முழு ஊரடங்கு அமலாகியுள்ளது. கொரோனா பரவலை காரணம் காட்டி, தற்போது, 55 வயதுக்கு மேற்பட்டோர் நுாறு நாள் வேலை திட்டத்தில் பணிபுரிய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தால், விவசாயம் மற்றும் பிற தொழில்களுக்கு தொழிலாளர்கள் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்தாலும், தொழிலாளரின் வாழ்வாதாரத்தை காக்க, இத்திட்டம் துணைபுரிகிறது என்று தொழிற்சங்கங்கள் கூறுகின்றன.

நுாறு நாள் திட்ட தொழிலாளர்கள் கூறியதாவது:கடந்தாண்டு, நகரங்களில் பணிபுரிந்து வேலைவாய்ப்பிழந்த பலர், தங்கள் சொந்த ஊரில் மீண்டும் குடியேறினர். இவர்களும் இத்திட்டத்தில் சேர்ந்து, பணிபுரிந்தனர்.இத்திட்ட தொழிலாளர்கள், சமூக இடைவெளி பின்பற்றுதல், வாகனங்களில் கூட்டமாக வருவதை தவிர்த்தல், கைகளை அடிக்கடி கழுவுதல் போன்ற கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இது சரியானது. அதேசமயம், 55 வயதானவர்களுக்கும், நீரிழிவு நோயாளிகளுக்கும் பணி வழங்க மறுத்தல் போன்றவற்றில் இருந்து விலக்கு அளிக்கலாம்.முதலில், 45 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளருக்கு தடுப்பூசி போட்டுக்கொள்வதை உறுதிப்படுத்தும் வகையில், முகாம்கள் நடத்தப்பட வேண்டும்.இதேபோல், இத்திட்டத்தின் மூலம், முழுமையான சம்பளம் வழங்கப்பட வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.தேர்தல் அறிக்கையில் உறுதி'இத்திட்டத்தை பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கும் விரிவுபடுத்த மத்திய அரசை வலியுறுத்துவோம்' என்று அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., என இரு கட்சியினரும், தங்களது தேர்தல் வாக்குறுதியாக அளித்துள்ளனர். எனவே,அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தாலோ, தி.மு.க., ஆட்சிக்கு வந்தாலோ, தங்கள் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவார்கள் என்று நுாறு நாள் திட்ட தொழிலாளர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X