பொது செய்தி

தமிழ்நாடு

கோவைக்கு 'கொரோனா' தடுப்பூசி வந்தாச்சு ... மாநகராட்சிக்கு 4,000 'டோஸ்'

Added : மே 01, 2021
Share
Advertisement
கோவை : கோவை மாநகராட்சி பகுதியில், கொரோனா தடுப்பூசி போடுவதற்கு, 4,000 டோஸ் மருந்து விடுவிக்கப்பட்டது. மண்டலத்துக்கு, 800 வீதம் பிரித்துக் கொடுக்கப்பட்டது.கோவையில், அரசு மற்றும் இ.எஸ்.ஐ., மருத்துவமனைகள், மாநகராட்சி மருந்தகங்களில் இருப்பு இல்லாததால், தடுப்பூசி போடுவது பாதிக்கப்பட்டது. நாளொன்றுக்கு, 7,000 டோஸ் மருந்து தேவைப்பட்ட இடத்தில், 2,000 டோஸ் மட்டுமே வழங்கப்பட்டதால், ஒரே

கோவை : கோவை மாநகராட்சி பகுதியில், கொரோனா தடுப்பூசி போடுவதற்கு, 4,000 டோஸ் மருந்து விடுவிக்கப்பட்டது.

மண்டலத்துக்கு, 800 வீதம் பிரித்துக் கொடுக்கப்பட்டது.கோவையில், அரசு மற்றும் இ.எஸ்.ஐ., மருத்துவமனைகள், மாநகராட்சி மருந்தகங்களில் இருப்பு இல்லாததால், தடுப்பூசி போடுவது பாதிக்கப்பட்டது. நாளொன்றுக்கு, 7,000 டோஸ் மருந்து தேவைப்பட்ட இடத்தில், 2,000 டோஸ் மட்டுமே வழங்கப்பட்டதால், ஒரே நாளில் இருப்பு காலியானது. கடந்த இரு நாட்களாக தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டது.இவ்விஷயம், கலெக்டர் நாகராஜன் நேரடி கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

தடுப்பூசி மருந்து இருப்பு நிலவரங்களை கேட்டறிந்த அவர், அரசு மருத்துவமனை, மாநகராட்சி மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் என, ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக டோஸ் ஒதுக்கீடு செய்து, மருந்து சப்ளை செய்ய உத்தரவிட்டார்.அதன்படி, 12 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தலா, 250 வீதம், 3,000 டோஸ், அரசு மருத்துவமனை, இ.எஸ்.எஸ்., மருத்துவ மனைக்கு தலா, 1,000 டோஸ், பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு 500, மேட்டுப்பாளையம், அன்னுார், சூலுார், மதுக்கரை, சுண்டக்காமுத்துார், கிணத்துக்கடவு, பெரியநாயக்கன் பாளையம், தொண்டாமுத்துார் அரசு மருத்துவமனைகளுக்கு தலா, 300, வால்பாறை, கோலார்பட்டி, வேட்டைக்காரன்புதுார், கோட்டூர் அரசு மருத்துவமனைகளுக்கு தலா, 200 டோஸ் மருந்து விடுவிக்கப்பட்டது.

கோவை மாநகராட்சி மருத்துவமனைகளுக்கு மட்டும், மண்டலத்துக்கு, 800 வீதம், 4,000 டோஸ் வழங்கப்பட்டது. மாவட்ட அளவில், மொத்தம், 12 ஆயிரத்து, 700 டோஸ் மருந்து, ஒதுக்கப் பட்டுள்ளது; 900 டோஸ் இருப்பில் வைக்கப்பட்டிருக்கிறது.அதிகாரிகளிடம் கேட்ட போது, 'தற்போது வழங்கியுள்ள மருந்து, இரு நாட்களுக்கு பயன்படும். திங்கட்கிழமை மீண்டும் மருந்து கொடுத்தால் மட்டுமே, தடுப்பூசி போடும் பணியை தொடர்ந்து மேற்கொள்ள முடியும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X