பொது செய்தி

தமிழ்நாடு

தேர்தல் பணியில் இருப்போருக்கு முழு உடல் கவச உடை வழங்கல்

Added : மே 01, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ஓட்டு எண்ணும் மையத்தில், தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு, வைரஸ் தொற்று தடுப்பு முழு உடல் பாதுகாப்பு கவச உடை வழங்கப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார், ஆலந்துார் ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளுக்கும், காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை அண்ணா பொறியியல் உறுப்பு கல்லுாரியில், இன்று ஓட்டு

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ஓட்டு எண்ணும் மையத்தில், தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு, வைரஸ் தொற்று தடுப்பு முழு உடல் பாதுகாப்பு கவச உடை வழங்கப்படுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார், ஆலந்துார் ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளுக்கும், காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை அண்ணா பொறியியல் உறுப்பு கல்லுாரியில், இன்று ஓட்டு எண்ணப்படுகிறது.தற்போது, கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மாவட்ட நிர்வாகம், அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அந்த வகையில், மாவட்ட சுகாதாரத் துறையும், ஓட்டு எண்ணப்படும் இன்று, தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு, கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.இது குறித்து, மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குனர் பழனி கூறியதாவது:ஓட்டு எண்ணும் மையத்திற்குள் செல்வோர் அனைவரையும் வெப்ப பரிசோதனை செய்வதற்கு தேவையான சாதனங்கள் தரப்பட்டுள்ளன. கிருமி நாசினி, முகத்திற்கு தடுப்பு கவசம் மற்றும் 10 ஆயிரம் தொற்று தடுப்பு முழு உடல் கவச உடைகள், சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலரிடம் வழங்கி உள்ளோம்.ஓட்டு எண்ணும் மையத்தில் மேல் தளம், கீழ் தளங்களில் மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத் துறை சார்பில், 70 பேர், இதற்கான பணியில் ஈடுபடுவர்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X