பொது செய்தி

தமிழ்நாடு

காஞ்சியில் தொழிலாளர் தின விழா

Added : மே 01, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில், நேற்று நடந்த தொழிலாளர் தின விழாவில், நகராட்சி துாய்மை பணியாளர்களின் பாதங்களுக்கு மலர் துாவி கவுரவிக்கப்பட்டது. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த டாக்டர் கலாம் வழியில் உதவும் அறக்கட்டளை சார்பில், திருக்காலிமேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில், நேற்று, தொழிலாளர் தின விழா கொண்டாடப்பட்டது.இதில்,கொரோனா காலத்தில், தன்னலம் கருதாமல் பணியாற்றிய,

காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில், நேற்று நடந்த தொழிலாளர் தின விழாவில், நகராட்சி துாய்மை பணியாளர்களின் பாதங்களுக்கு மலர் துாவி கவுரவிக்கப்பட்டது.

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த டாக்டர் கலாம் வழியில் உதவும் அறக்கட்டளை சார்பில், திருக்காலிமேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில், நேற்று, தொழிலாளர் தின விழா கொண்டாடப்பட்டது.இதில்,கொரோனா காலத்தில், தன்னலம் கருதாமல் பணியாற்றிய, நகராட்சி துாய்மை பணியாளர்கள் கவுரவிக்கப்பட்டனர்.அறக்கட்டளை நிர்வாகிகள், துாய்மை பணியாளர்கள் ஒவ்வொருவரின் பாதங்களுக்கும் மலர் துாவி கவுரவித்தனர். மேலும், அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை வழங்கினர்.முன்னதாக, பொதுமக்களுக்கு கபசுர குடிநீரும், சின்ன வேப்பங்குளக்கரையில் நிழல் தரும் மரக்கன்றுகள் நடவு செய்தனர். இதேபோல், தேனி மாவட்ட கிளையில் நடந்த விழாவிலும், துாய்மை பணியாளர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

கல்பாக்கத்தில், அணுசக்தித் துறை நிறுவனங்களின், ஊழியர்கள் தொழிற்சங்கங்கள் செயல்படுகின்றன. மே தினமான நேற்று, தமிழ்நாடு அணுமின் ஊழியர் சங்கம், அணுவாற்றல் ஊழியர்கள் சங்கம், பாபா அணு ஆராய்ச்சி மைய ஊழியர் சங்கம் உள்ளிட்ட சங்க அலுவலக பகுதிகளில், நிர்வாகிகள், கொடியேற்றி உரையாற்றினர். சதுரங்கப்பட்டினம் ரவுண்டானா பகுதியில், தொழிற்சங்கங்கள் கூட்டுக்குழு சார்பில், கொடியேற்றி கொண்டாடப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X