சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரசாயனத்தில் பழுக்க வைத்த 1.7 டன் மாம்பழம் அழிப்பு

Added : மே 01, 2021
Share
Advertisement
சேலம்:ரசாயனம் மூலம் பழுக்க வைத்த, 1.7 டன் மாம்பழம், குப்பை கிடங்கில் கொட்டி அழிக்கப்பட்டது.சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் அடுத்த மேட்டுப்பட்டி தாதனுாரில், ரசாயன மாம்பழங்கள் விற்பதாக புகார் எழுந்தது. உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் தலைமையில் அதிகாரிகள், ஒரு குடோனில் நேற்று சோதனை செய்தனர். அதில் ரசாயன தெளிப்பான் மூலம், மாம்பழம் பழுக்க வைத்திருப்பது

சேலம்:ரசாயனம் மூலம் பழுக்க வைத்த, 1.7 டன் மாம்பழம், குப்பை கிடங்கில் கொட்டி அழிக்கப்பட்டது.

சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் அடுத்த மேட்டுப்பட்டி தாதனுாரில், ரசாயன மாம்பழங்கள் விற்பதாக புகார் எழுந்தது. உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் தலைமையில் அதிகாரிகள், ஒரு குடோனில் நேற்று சோதனை செய்தனர். அதில் ரசாயன தெளிப்பான் மூலம், மாம்பழம் பழுக்க வைத்திருப்பது கண்டுபிடித்தனர்.

மொத்தம், 1.7 டன் கிலோ பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 7 லிட்டர் ரசாயன திரவமும் சிக்கியது.பறிமுதல் பழங்கள், ரசாயனம், குப்பைக்கிடங்கில் கொட்டி அழிக்கப் பட்டது. அதன் மதிப்பு, 1.40 லட்சம் ரூபாய். இது தொடர்பாக பழக்கடை உரிமையாளர் வெங்டேசன், 45, மீது, உணவு பாதுகாப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X