பொது செய்தி

தமிழ்நாடு

இரை தேடி குடியிருப்பு பகுதிக்கு வரும் பறவைகள்

Added : மே 01, 2021
Share
Advertisement
பந்தலுார் : 'கூடலுார் வன கோட்டத்தில் கோடையின் தாக்கம் அதிகரித்துள்ளதால் குடியிருப்பு பகுதிகளை நாடி வரும் பறவைகளுக்கு தண்ணீர் வைக்க வேண்டும்,' என, அறிவுறுத்தப்பட்டது. நீலகிரியில் அழிக்கப்படும் தோட்டங்கள் மற்றும் வனங்கள், அதிகரிக்கும் கட்டடங்கள், அழிவின் பிடியில் சிக்கியுள்ள நீர் ஆதாரங்கள் இவற்றின் காரணமாக, சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, சமவெளிகளை மிஞ்சும்

பந்தலுார் : 'கூடலுார் வன கோட்டத்தில் கோடையின் தாக்கம் அதிகரித்துள்ளதால் குடியிருப்பு பகுதிகளை நாடி வரும் பறவைகளுக்கு தண்ணீர் வைக்க வேண்டும்,' என, அறிவுறுத்தப்பட்டது.

நீலகிரியில் அழிக்கப்படும் தோட்டங்கள் மற்றும் வனங்கள், அதிகரிக்கும் கட்டடங்கள், அழிவின் பிடியில் சிக்கியுள்ள நீர் ஆதாரங்கள் இவற்றின் காரணமாக, சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, சமவெளிகளை மிஞ்சும் அளவுக்கு, கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால், மக்கள் குடிநீருக்காக திண்டாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதுடன், சில பகுதிகளில், பணம் கொடுத்து குடிநீரை வாங்க வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது.இதன் பாதிப்பு மனிதர் களுக்கு மட்டுமல்லாமல், வன உயிரினங்களையும் அதிகளவில் பாதித்துள்ளது.

வனத்தீயால் பாதிப்புகோடையை பயன்படுத்தி, வனப்பகுதிகள் சமூக விரோதிகளால் தீ வைக்கப்பட்டு அழிக்கப்படுவதன் காரணமாக, வன விலங்குகளின் வாழ்விடங்களும் அழிந்து வருகிறது. இதனால், உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு, வன விலங்குகள் மற்றும் பறவைகள் மக்கள் குடியிருப்புகளை நாடி வருவதும் அதிகரித்து காணப்படுகிறது.'வன விலங்குகளுக்கு மக்கள் உணவு பொருட்களை வழங்க கூடாது,' என்ற நிலை இருந்த போதும், தண்ணீர் இன்றி, தங்களை நாடி வரும் பறவைகள் மற்றும் வன விலங்குகளுக்கு தண்ணீர் மற்றும் உணவுகளை வைப்பதில், கூடலுார், பந்தலுார் பகுதிகளில் இளைய சமுதாயத்தினர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அதில், தண்ணீர் தேடி வரும் பல வண்ண பறவைகளுக்கு, வீட்டு கூரைகள்; மாடிகளில் நாள்தோறும் மாணவ, மாணவியர் தண்ணீர் வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில், பந்தலுாரில் நடந்த பறவைகள் குறித்த கள பயணத்தின் போது, வன உயிரின ஆர்வலர், ஆசிரியர் மாரியப்பன் பேசுகையில்,''வன உயிரினங்களுக்கு நாம் தண்ணீர் வைப்பதும், உணவு கொடுப்பதும், இது ஒரு புறம் பாதிப்பை ஏற்படுத்தினாலும், வறட்சியான கோடை காலத்தில், அவற்றை உயிர் காக்க இந்த தண்ணீர் உதவும்.

நாள் பறவைகளுக்கு இடையூறு செய்யாமல், மாடியில் தண்ணீர் வைக்கும் போது, அவர்கள் அதனை குடித்து பயன்பெறும். ''வனத்தை ஒட்டிய குட்டைகளில் நீர் நிரப்புவதால், விலங்குகள் அவற்றை இரவில் வந்து குடித்து செல்லும். இதுபோன்று மறை முக உதவிகளை மாணவ, மாணவிகள் மேற்கொள்ள வேண்டும். இதை தவிர, குடியிருப்புகளுக்கு அருகில் மரக்கன்று களை நடவு செய்தால் எதிர்காலத்தில் பறவைகள் மற்றும் சிறு வன உயிரினங்களுக்கு அது வாழ்விடமாக அமையும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X