பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்டான்லியில் 1,800 பேர் 'அட்மிட்'

Added : மே 01, 2021
Share
Advertisement
ராயபுரம் : வடசென்னையில், கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட, 1,800 பேர், ஸ்டான்லி மருத்துவமனையில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். அதில், 150 பேர் தீவிர பிரிவில் சிகிச்சை பெறுகின்றனர். ராயபுரம், ஸ்டான்லி மருத்துவமனையில், தினமும், கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட, 600க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு வருகின்றனர்.மேலும், காய்ச்சல், சளி, இருமல் அறிகுறியுடன் தினமும், 400க்கும்

ராயபுரம் : வடசென்னையில், கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட, 1,800 பேர், ஸ்டான்லி மருத்துவமனையில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். அதில், 150 பேர் தீவிர பிரிவில் சிகிச்சை பெறுகின்றனர்.

ராயபுரம், ஸ்டான்லி மருத்துவமனையில், தினமும், கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட, 600க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு வருகின்றனர்.மேலும், காய்ச்சல், சளி, இருமல் அறிகுறியுடன் தினமும், 400க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். வடசென்னையில், கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட, 1,600 பேர் ஸ்டான்லி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதில், 150 பேர், தீவிர பிரிவில் சிகிச்சை பெறுகின்றனர்.மேலும், ஸ்டான்லி மருத்துவமனையில், கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வந்தவர்களில், 280 பேர், பாரதி மகளிர் கல்லுாரி, வியாசர்பாடி அம்பேத்கர் கலைக்கல்லுாரி, புழல், வேலம்மாள் கல்லுாரி மற்றும் அத்திப்பட்டு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் அமைக்கப்பட்ட, தற்காலிக கொரோனா மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மேலும், சிகிச்சை பெற்ற, 200 பேர், நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். தொற்றால் பாதிக்கப்பட்ட, 72, 82 வயதுடைய இரு பெண்கள், 68, 70 வயதுடைய, இரண்டு ஆண்கள் என, நால்வர் உயிரிழந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X