அரசியல் செய்தி

தமிழ்நாடு

வெற்றி ஊர்வலம் வேண்டாம்: அ.தி.மு.க., உத்தரவு

Updated : மே 02, 2021 | Added : மே 01, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
சென்னை : 'வெற்றி கொண்டாட்டங்களை, மிக அவசியமான நெறிகளுக்கு உட்பட்டு, அடக்கத்துடன் நடத்திட வேண்டும். பட்டாசு வெடிப்பது, வெற்றி ஊர்வலம் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்., ஆகியோர் தெரிவித்துள்ளனர்.அவர்கள் அறிக்கை:அ.தி.மு.க.,வினரும், அ.தி.மு.க., மீது பேரன்பு கொண்ட நல்லோரும், ஓட்டு எண்ணிக்கை முடிவுகள்
வெற்றி ஊர்வலம்,ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., உத்தரவு

சென்னை : 'வெற்றி கொண்டாட்டங்களை, மிக அவசியமான நெறிகளுக்கு உட்பட்டு, அடக்கத்துடன் நடத்திட வேண்டும். பட்டாசு வெடிப்பது, வெற்றி ஊர்வலம் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்., ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் அறிக்கை:அ.தி.மு.க.,வினரும், அ.தி.மு.க., மீது பேரன்பு கொண்ட நல்லோரும், ஓட்டு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்படும் போது, அமைதியுடன், விழிப்புடன், ஆற்றலுடன் நடந்து கொள்ள வேண்டும்.கொரோனா பெருந்தொற்று பரவி வரும் சூழலில், அனைவரும் பத்திரமாகவும், பாதுகாப்புடனும் செயல்படுவது இன்றியமையாதது. அது, சமூகத்திற்கு நாம் ஆற்ற வேண்டிய கடமை என்பதை மறவாதீர்.ஓட்டு எண்ணிக்கையின் போதும், முடிவுகள் வெளியாகும் போதும், அரசியல் கட்சியினரும், வேட்பாளர்களின் முகவர்களும் எவ்வாறு செயல்பட வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள, வழிகாட்டு நெறிமுறைகளை, கட்சியினர் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

ஒரு நொடியும் நெறிகளை மீறிவிடக் கூடாது.ஓட்டு எண்ணும் இடங்களுக்கு, யார் செல்ல வேண்டும். முழு ஊரடங்கை எப்படி பின்பற்ற வேண்டும் என, தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களை அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.அரசுடன் ஒத்துழைத்து, அதிகாரிகள் வழிகாட்டுதலை ஏற்று, கட்டுப்பாடுடன் வெற்றிக் கொண்டாட்டங்களை, மிக அவசியமான நெறிகளுக்கு உட்பட்டு, அடக்கத்துடன் நடத்திட வேண்டும். பட்டாசு வெடிப்பது, வெற்றி ஊர்வலம் போவது போன்ற செயல்களில், யாரும் ஈடுபடக் கூடாது.இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivas - Chennai,இந்தியா
02-மே-202114:12:08 IST Report Abuse
Srinivas ஒழிந்தானுங்க.....தமிழகம் இனிமேலாவது தலை நிமிர்ந்து நிற்கும். கூழைக்கும்பிடு போட்டே தமிழகத்தை வடக்கதியானிடம் அடகு வைத்த அடிமைகொள்ளைக்கும்பல். தமிழகத்தை சுரண்டி பல லட்சம் கோடி கடனை வைத்துவிட்டானுங்க.
Rate this:
Cancel
P.ELAMARAN - riyadh,சவுதி அரேபியா
02-மே-202111:39:28 IST Report Abuse
P.ELAMARAN இம்ம் ...கும்ம்ம்ம் .....முதல் வகுப்பா , இரண்டாம் வகுப்பா ? என தீர்மானம் போட்டுக்கொள்ளவும்
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
02-மே-202107:49:54 IST Report Abuse
Girija செம காமெடி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X