தமிழ்நாடு

அவசியம்! கோயம்பேடில் வியாபாரிகள் கூட்டம் ...நோய் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை

Updated : மே 02, 2021 | Added : மே 01, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை : ஞாயிறு முழு ஊரடங்கை ஒட்டி, கோயம்பேடு மார்க்கெட்டில், நேற்று திரண்ட வியாபாரிகளால், தொற்று அபாயம் ஏற்பட்டது. காய்கறிகள், பழங்கள் விற்பனையும், அதிகளவில் நடந்தன.கோயம்பேடு மார்க்கெட்டில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இருப்பினும், பலரும் சமூக இடைவெளி பின்பற்றாமல், முக கவசம் அணியாமல், மார்க்கெட்டிற்கு
அவசியம்! கோயம்பேடில் வியாபாரிகள் கூட்டம் ...நோய் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை

சென்னை : ஞாயிறு முழு ஊரடங்கை ஒட்டி, கோயம்பேடு மார்க்கெட்டில், நேற்று திரண்ட வியாபாரிகளால், தொற்று அபாயம் ஏற்பட்டது.

காய்கறிகள், பழங்கள் விற்பனையும், அதிகளவில் நடந்தன.கோயம்பேடு மார்க்கெட்டில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இருப்பினும், பலரும் சமூக இடைவெளி பின்பற்றாமல், முக கவசம் அணியாமல், மார்க்கெட்டிற்கு வந்து செல்கின்றனர்.இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது, அங்காடி நிர்வாக குழு வாயிலாக, அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. ஆனால், விதிமீறலை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையான இன்று, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, கோயம்பேடு மார்க்கெட்டிற்கு, 350க்கும் மேற்பட்ட லாரிகளில், நேற்று காய்கறிகள் விற்பனைக்கு வந்தன.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட வியாபாரிகள், அதிகளவில் மார்க்கெட்டிற்கு வந்து, பொருட்களை அள்ளி சென்றனர். இதனால், அதிகாலை, 4:00 மணி முதல், பகல், 11:00 மணி வரை, விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.பழ மார்க்கெட்டிற்கு வந்த, 200 லாரி பழங்களில், 80 சதவீதம் விற்பனையானது. மளிகை பொருட்கள் மார்க்கெட்டிலும், விற்பனை களைக்கட்டியது. விசேஷ நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், பூ மார்க்கெட்டில், இயல்பை விட குறைவாகவே விற்பனை நடந்தது.சனிக்கிழமை, கோயம்பேடு மார்க்கெட்டில் குவியும் வியாபாரிகள் கூட்டத்தை கட்டுப்படுத்தா விட்டால், கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
03-மே-202117:11:16 IST Report Abuse
ஆப்பு Survival of the fittest. எல்லோரும் போகட்டும் விடுங்க. பொழைக்குறவன் பொழைச்சுப்பான். போறவன் போகட்டும். தென்னை மரத்தின் மேல் ஏறுபவனை எவ்வளவு தூக்கி விட முடியும்? பூமிபாரம் குறையட்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X