பொது செய்தி

தமிழ்நாடு

நடைபாதையில் பிரசவம்: தாயும், சேயும் நலம்

Added : மே 01, 2021
Share
Advertisement
கொடுங்கையூர் : கொடுங்கையூரில், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே, பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, நடைபாதையில் கூலித் தொழிலாளி மனைவிக்கு குழந்தை பிறந்தது. சென்னை, கொடுங்கையூர், சின்னாண்டி மடம், மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் குணசேகரன், 34; கூலித் தொழிலாளி.இவரது மனைவி மாலதி, 30. இவர், நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். திடீரென அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, மாலதியை

கொடுங்கையூர் : கொடுங்கையூரில், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே, பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, நடைபாதையில் கூலித் தொழிலாளி மனைவிக்கு குழந்தை பிறந்தது.

சென்னை, கொடுங்கையூர், சின்னாண்டி மடம், மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் குணசேகரன், 34; கூலித் தொழிலாளி.இவரது மனைவி மாலதி, 30. இவர், நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். திடீரென அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, மாலதியை அழைத்துக் கொண்டு, சிட்கோ மெயின் ரோடு வழியாக, நேற்று மருத்துவமனைக்கு சென்றனர். ஆனால், வலி அதிகமாகவே, நடைபாதையில் அமர வைக்கப்பட்டார். அங்கு, அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அப்போது, நடைபயிற்சிக்கு சென்ற, காவலர்கள் திருஞானவேல், சங்கர் ஆகியோர், பொதுமக்கள் உதவியுடன், மாலதியை, குழந்தையுடன், 108 ஆம்புலன்சில் ஏற்றி, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X