பொது செய்தி

தமிழ்நாடு

கோடையில் பயன் தரும் 'பட்டர் புரூட்' கிராக்கியால் விவசாயிகள் மகிழ்ச்சி

Added : மே 01, 2021
Share
Advertisement
பந்தலுார் : கோடை காலத்தில் உடல் குளிர்ச்சிக்கு அதிகளவில் பயன்தரும் பட்டர் புரூட் விளைச்சல் அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு வகை பழங்கள் விளைவிக்கப்படுகிறது. அதில், 'அவகோடா' என, அழைக்கப்படும் பட்டர்புரூட் விவசாயம், பந்தலுார் மற்றும் கூடலுார், குன்னுார் பகுதிகளில் அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது. ஆண்டுதோறும்

பந்தலுார் : கோடை காலத்தில் உடல் குளிர்ச்சிக்கு அதிகளவில் பயன்தரும் பட்டர் புரூட் விளைச்சல் அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு வகை பழங்கள் விளைவிக்கப்படுகிறது.

அதில், 'அவகோடா' என, அழைக்கப்படும் பட்டர்புரூட் விவசாயம், பந்தலுார் மற்றும் கூடலுார், குன்னுார் பகுதிகளில் அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது. ஆண்டுதோறும் ஏப்., முதல் ஜூலை மாதம் வரை, முதல் கட்டமாகவும்; செப்., முதல் நவ., மாதம் வரை இரண்டாவது கட்டமாகவும், இந்த விளச்சல்மற்றும் அறுவடை காலம் உள்ளது.ஒரு மரத்தில், 300 பழங்கள் வரை காய்க்கும். ஒரு பழத்தில், 30 கிராம் கொழுப்பு சத்து கிடைக்கும். இந்த வகை கொழுப்பு உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கிறது. குறைந்த ரத்த அழுத்தத்தை சீராக்கும் தன்மை கொண்டது.

இந்நிலையில் பந்தலுார், கூடலுார் இளைஞர்கள் பலரும் இந்த பழங்களை, விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து, கோவை, பெங்களூரு, சென்னை, கொச்சின் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மொத்த வியாபாரிகளுக்கு சப்ளை செய்கின்றனர். இதனால் சிறு விவசாயிகள் மகழ்ச்சி அடைந்துள்ளனர். நன்கு பழுத்த பழத்தை தோலை நீக்கி, பால் மற்றும் நாட்டு சர்க்கரை சேர்ந்து கலக்கி பருகினால் நல்ல சுவை கிடைக்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X