சென்னையில் தேர்தல் முடிவுகள் தெரிய 20 மணி நேரமாகும்: பிரகாஷ்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் தேர்தல் முடிவுகள் தெரிய 20 மணி நேரமாகும்: பிரகாஷ்

Added : மே 01, 2021
Share
சென்னை : ''சென்னையின், 16 தொகுதிகளுக்கு ஓட்டு எண்ணிக்கை முடிந்து, தேர்தல் முடிவுகள் தெரிய, 20 மணி நேரம் ஆகும்,'' என, மாவட்ட தேர்தல் அலுவலர் பிரகாஷ் கூறினார். சென்னை, பல்லவன் சாலையில் உள்ள கேந்திரியா வித்யாலயா பள்ளியில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கான, முதற்கட்ட உடற் பரிசோதனை மையம், 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை, கொரோனா

சென்னை : ''சென்னையின், 16 தொகுதிகளுக்கு ஓட்டு எண்ணிக்கை முடிந்து, தேர்தல் முடிவுகள் தெரிய, 20 மணி நேரம் ஆகும்,'' என, மாவட்ட தேர்தல் அலுவலர் பிரகாஷ் கூறினார்.

சென்னை, பல்லவன் சாலையில் உள்ள கேந்திரியா வித்யாலயா பள்ளியில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கான, முதற்கட்ட உடற் பரிசோதனை மையம், 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை, கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியும், வணிக வரித்துறை செயலருமான சித்திக், மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் ஆகியோர், நேற்று ஆய்வு செய்தனர்.பின், சித்திக் அளித்த பேட்டி: சென்னையில், பல இடங்களில் கொரோனா பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதுவரை, 15 முதற்கட்ட பரிசோதனை மையங்கள் உள்ளன. மேலும், ஆறு பரிசோதனை மையங்கள், தயார் செய்யப்பட்டு வருகின்றன.

ஓமந்துாரார் அரசு மருத்துவமனைக்கும், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கும் பொதுவாக, பல்லவன் சாலையில் உள்ள, கேந்திரியா வித்யாலயா பள்ளியில், முதற்கட்ட பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற மையங்களுக்கு வந்த பின், மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டும்.சென்னையில் ஏற்கனவே, 280 ஆம்புலன்ஸ் வாகனங்கள் உள்ளன. இந்த எண்ணிக்கை, 350 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கூடுதல் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான பிரகாஷ் அளித்த பேட்டி:சென்னையில், 619 முன்கள பணியாளர்கள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெறுகின்றனர். இதுவரை, 90 சதவீதம் முன்கள பணியாளர்களுக்கு, கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாம் அலையில், மாநகராட்சி முன்கள பணியாளர்கள் யாரும் உயிரிழக்கவில்லை. ஆனால், மூன்று போலீசார் இறந்துள்ளனர். ஓட்டு எண்ணும் மையங்களில், பணியில் ஈடுபடும் ஊழியர்களில், 155 பேர், இரண்டு தவணை தடுப்பூசி போட்டுள்ளனர். 911 பேர் கொரோனா பரிசோதனை செய்துள்ளனர். அதில், ஏழு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், 1,059 பேர் ஓட்டு எண்ணும் பணிகளில் ஈடுபடுகின்றனர். அதேபோல், மூன்று ஓட்டு எண்ணும் மையங்களில், 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.ஓட்டு எண்ணும் மையங்களில், ஒவ்வொரு வேட்பாளர்களுக்கும், ஒரு முகவர்கள் உட்பட, 5,795 முகவர்கள் உள்ளனர். இவர்களில், 204 முகவர்கள், இரண்டு தவணை தடுப்பூசி போட்டுள்ளனர். மேலும், 3,845 பேர் கொரோனா பரிசோதனை செய்துள்ளனர். ஓட்டு எண்ணிக்கைக்கு, சிறிய தொகுதியான தி.நகரில், 14 மணி நேரமும், பெரிய தொகுதியான கொளத்துாரில், 20 மணி நேரமும் ஆகும். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபரோ, குடும்பத்தினரோ வெளியே சுற்றினால், முதல் முறை, 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அடுத்த முறை, தனிமைப்படுத்தும் மையங்களுக்கு அனுப்பப்படுவர். சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில், 2,400 ஆக்சிஜன் இணைப்புகளும், சென்னையை தவிர்த்து பிற பகுதிகளில், 3,600 ஆக்சிஜன் இணைப்புகளும் தயாராகி வருகின்றன. சென்னையில், இதுவரை கூடுதலாக, 1,200 ஆக்சிஜன் படுக்கைகள் தயாராக உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X