'பிரதமரை நம்பாதீர்கள்; நீங்களே உங்களை தற்காத்துக்கொள்ளுங்கள்'- ராகுல்

Updated : மே 01, 2021 | Added : மே 01, 2021 | கருத்துகள் (59)
Share
Advertisement
டில்லி: கொரோனா வைரஸ் தாக்கத்தில் இரண்டாவது அலை தற்போது இந்தியாவில் தீவிரமடைந்து வருகிறது. இதனையடுத்து எதிர்க்கட்சியான காங்கிரஸ் மோடி அரசை தொடர்ந்து இதுகுறித்து குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் மற்றும் வயநாடு நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் மோடி அரசை விளாசித் தள்ளினார். அரசு மருத்துவமனை வாசலில் ஆக்சிஜன்

டில்லி: கொரோனா வைரஸ் தாக்கத்தில் இரண்டாவது அலை தற்போது இந்தியாவில் தீவிரமடைந்து வருகிறது. இதனையடுத்து எதிர்க்கட்சியான காங்கிரஸ் மோடி அரசை தொடர்ந்து இதுகுறித்து குற்றம்சாட்டி வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் மற்றும் வயநாடு நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் மோடி அரசை விளாசித் தள்ளினார்.



latest tamil news



அரசு மருத்துவமனை வாசலில் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மக்கள் வரிசையில் நின்று கொண்டிருக்கின்றனர். மறுபக்கமாக இடுகாட்டில் தங்களது உறவினர்கள் சடலங்களை எரிக்கவும் மக்கள் வரிசையில் நின்று கொண்டிருக்கின்றனர். அத்தியாவசிய மருந்துகள், படுக்கைகள் உள்ளிட்டவற்றை பெறவும் இதே வரிசை அல்லாடிக் கொண்டிருக்கிறது.

இவ்வாறாக நாடு முழுவதும் வைரஸ் தாக்கத்தால் இந்தியர்கள் தத்தளித்து வருகின்றனர். இதற்கு மோடி அரசை குற்றம் சாட்டிய ராகுல், விஞ்ஞானிகளின் ஆரம்பகட்ட எச்சரிக்கையை மோடி அரசு புறக்கணித்ததாகவும் அதனை சரியாக பின்பற்றி இருந்தால் இவ்வளவு மோசமான சூழ்நிலை உருவாகி இருக்காது என்றும் கூறி உள்ளார்.

தினமும் காலையில் எழும்போது பாதிக்கப்பட்ட மக்களின் கூக்குரலும் அழுகையும் மனதை கலங்கச் செய்கின்றன என்று கூறிய ராகுல், இதற்கு பிரதமர் மோடியே முழுமுதற் காரணம் என்று தெரிவித்தார். அவர் கற்பனையில் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும், நிகழ்கால உண்மையை ஏற்க மறுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸின் இரண்டாவது அலையை மோடி அரசு மிகச் சாதாரணமாக எடுத்துக் கொண்டதாகவும் அதன் வீரியத்தை உணராமல் முதல் அலை ஓய்ந்ததும் மோடிக்கு பாஜ., அமைச்சர்கள் பாராட்டு தெரிவித்ததாகவும் குற்றம் சாட்டிய ராகுல் இறுதியாக கொரோனா வைரஸே வெற்றி பெற்றதாகத் தெரிவித்துள்ளார்.


latest tamil news



தற்போது நிலைமை கைமீறிப் போய்விட்டதாகவும் மக்கள் மத்திய அரசையோ பிரதமரை இனி நம்பிக் கொண்டிருக்காமல் தங்களைத் தாங்களே தற்காத்துக்கொள்ள வேண்டியது அவசியம் என்று தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (59)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R. Vidya Sagar - Chennai,இந்தியா
02-மே-202110:37:40 IST Report Abuse
R. Vidya Sagar அப்பொழுது கூட ஊசி போடுங்க என்று சொல்ல வாய் வர மாட்டேங்குது. இவர் ஊசி போட்ட மாதிரியும் தெரிய வில்லை. பண மதிப்பீடு நீக்கத்தின் பொது வரிசையில் நின்று பணம் எடுத்த போட்டோ போட்ட இவர் வரிசையில் நின்று ஊசி போட்ட படத்தையும் ஆவலுடன் எதிர் பார்க்கிறோம்.
Rate this:
Cancel
kumarkv - chennai,இந்தியா
02-மே-202110:23:18 IST Report Abuse
kumarkv மக்கள் ஜக்ரதையாக இருகணம். மழையில் குடை யெடுத்துகொண்டு செல்லவும். Modi உங்களுக்கு குடை கொடுக்கமாட்டார். நீங்களே உங்களை காப்பாற்றி கொள்ளவும்.
Rate this:
Cancel
kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா ) பப்பு பின்ன என்னாத்துக்கு இங்க குந்திட்டு இருக்க இத்தாலிக்கு ஓடிரு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X