சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோடநாடு கொலை வழக்கு கைதிக்கு கொரோனா

Added : மே 01, 2021
Share
Advertisement
குன்னுார் : கோடநாடு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, குன்னுார் சிறையில் இருந்த கைதிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நீலகிரி மாவட்டம், கோடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.,வுக்கு சொந்தமான எஸ்டேட், பங்களாவில் கடந்த, 2017, ஏப்., 24ல், கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடந்தது. இந்த வழக்கு ஊட்டியில், செசன்ஸ் கோர்டில் நடந்து வருகிறது.வழக்கில்

குன்னுார் : கோடநாடு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, குன்னுார் சிறையில் இருந்த கைதிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

நீலகிரி மாவட்டம், கோடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.,வுக்கு சொந்தமான எஸ்டேட், பங்களாவில் கடந்த, 2017, ஏப்., 24ல், கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடந்தது. இந்த வழக்கு ஊட்டியில், செசன்ஸ் கோர்டில் நடந்து வருகிறது.வழக்கில் கைது செய்யப்பட்ட, 10 பேரில், 8 பேர் ஜாமினில் உள்ளனர். முக்கிய குற்றவாளியாக கருதப்படும், சயான், வாளையார் மனோஜ் ஆகியோர் குன்னுார் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த, 28ல், கைதிகளுக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில், வாளையார் மனோஜ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தொடர்ந்து, நேற்று மதியம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன், ஊட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதே சிறையில் உள்ள, 66 வயது கைதிக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு ஊட்டிக்கு அனுப்பப்பட்டார்.மற்ற கைதிகள், சிறை ஊழியர்கள், போலீசாருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X