பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டு மையத்தில் வாகனங்கள் நிறுத்தம் குறித்து அறிவிப்பு

Added : மே 01, 2021
Share
Advertisement
சென்னை : சென்னையில், ஓட்டு எண்ணும் மைய வளாகத்தில், வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் குறித்து, போலீசார் அறிவித்து உள்ளனர். இது குறித்து போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: நுங்கம்பாக்கம், லயோலா கல்லுாரி ஓட்டு எண்ணும் மையத்திற்கு வரும் வேட்பாளர்களின் முதன்மை முகவர்கள் மற்றும் முகவர்கள், தங்கள் வாகனங்களை, நுழைவு வாயில் அருகே உள்ள மைதானத்தில்

சென்னை : சென்னையில், ஓட்டு எண்ணும் மைய வளாகத்தில், வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் குறித்து, போலீசார் அறிவித்து உள்ளனர்.

இது குறித்து போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: நுங்கம்பாக்கம், லயோலா கல்லுாரி ஓட்டு எண்ணும் மையத்திற்கு வரும் வேட்பாளர்களின் முதன்மை முகவர்கள் மற்றும் முகவர்கள், தங்கள் வாகனங்களை, நுழைவு வாயில் அருகே உள்ள மைதானத்தில் நிறுத்த வேண்டும் இம்மையத்திற்கு வரும் அதிகாரிகள், லயோலா கல்லுாரியின் உட்புறத்தில், வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம் ராணி மேரி கல்லுாரி ஓட்டு எண்ணும் மையத்திற்கு வரும், வேட்பாளர்களின் முதன்மை முகவர்கள் மற்றும் முகவர்கள், வாகனங்களை மெரினா கடற்கரை அணுகு சாலையில், காந்தி சிலை அருகே நிறுத்த வேண்டும் இம்மையத்திற்கு வரும் அதிகாரிகள், ராணிமேரி கல்லுாரியின் உட்புறத்தில், வாகனங்களை நிறுத்த வேண்டும்

அண்ணா பல்கலை ஓட்டு எண்ணும் மையத்திற்கு வரும் வேட்பாளர்களின் முதன்மை முகவர்கள் மற்றும் முகவர்கள், காந்தி மண்டபம் மற்றும் பிர்லா பிளானடோரியம் உட்புறத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டும் அதிகாரிகள், அண்ணா பல்கலை அருகே உள்ள நெடுஞ்சாலை துறை அலுவலகத்தின் உட்புறத்தில், வாகனங்களை நிறுத்த வேண்டும் சென்னை கிறிஸ்துவ கல்லுாரி ஓட்டு எண்ணும் மையத்திற்கு வரும் வேட்பாளர்களின் முதன்மை முகவர்கள் மற்றும் முகவர்கள், கிழக்கு தாம்பரம் ரயில்வே மைதானத்தில் வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம் அதிகாரிகள், கிறிஸ்துவ கல்லுாரியின் உட்புறம் வாகனங்களை நிறுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X