பொது செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்திகள்....//

Added : மே 01, 2021
Share
Advertisement
தொழிலாளிக்கு 'போக்சோ'கொருக்குப்பேட்டை: கொருக்குப்பேட்டை, அனந்தநாயகி நகரைச் சேர்ந்தவர் முகமது சாதிக், 37; கூலித் தொழிலாளி. இவர், தன் வீட்டருகே வசிக்கும், 12 வயது சிறுமியிடம், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார், சம்பவத்தில் ஈடுபட்டுள்ள முகமது சாதிக் என்பவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். ரூ.1 லட்சம் கடிகாரங்கள் மாயம்

தொழிலாளிக்கு 'போக்சோ'கொருக்குப்பேட்டை: கொருக்குப்பேட்டை, அனந்தநாயகி நகரைச் சேர்ந்தவர் முகமது சாதிக், 37; கூலித் தொழிலாளி. இவர், தன் வீட்டருகே வசிக்கும், 12 வயது சிறுமியிடம், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார், சம்பவத்தில் ஈடுபட்டுள்ள முகமது சாதிக் என்பவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

ரூ.1 லட்சம் கடிகாரங்கள் மாயம் கோயம்பேடு: மதுரவாயலைச் சேர்ந்தவர் சபான், 71. இவரது வீட்டில், ஏப்., 8ம் தேதி முதல், 20ம் தேதி வரை, பெயின்ட் அடிக்கும் பணியில், அத்திப்பட்டைச் சேர்ந்த செல்வகுமார், 44, அரும்பாக்கத்தைச் சேர்ந்த மணிவண்ணன், 43, பிரவீன் குமார், 33, சதீஷ்குமார், 33, உள்ளிட்டோர் ஈடுபட்டனர். இந்நிலையில், அவரது படுக்கை அறையில் இருந்த, 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான கை கடிகாரங்கள் மற்றும் ஆவணங்கள் மாயமானது. கோயம்பேடு போலீசார் பெயின்டிங் பணியில் ஈடுபட்ட நால்வரிடம், விசாரிக்கின்றனர்.

நன்னடத்தை மீறிய மூவருக்கு சிறைகண்ணகி நகர்: கண்ணகி நகரைச் சேர்ந்தவர்கள் குப்புசாமி, 32, சின்னவர், 26, அருண், 23. இவர்கள் மீது, பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்தாண்டு, ஆகஸ்ட், குப்புசாமி; இந்த ஆண்டு பிப்ரவரி, அருண்; மார்ச், சின்னவர் ஆகியோர், அடையாறு, காவல் துணை ஆணையர் விக்ரமன் முன் ஆஜராகினர். அப்போது, 'ஒரு ஆண்டு, எந்தவித குற்ற சம்பவங்களிலும் ஈடுபட மாட்டோம்' என, நன்னடத்தை பிணை பத்திரம் எழுதி கொடுத்தனர். இந்நிலையில், கடந்த மாதம், 19ம் தேதி, குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதால், மூன்று பேரையும், கண்ணகி நகர் போலீசார் கைது செய்தனர். இதை தொடர்ந்து, நன்னடத்தை பிணை ஆணையை மீறிய குற்றத்திற்காக, மூன்று பேரையும், முறையே, 106, 309 மற்றும் 323 நாட்கள் சிறையில் அடைக்க, அடையாறு காவல் துணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X