பொது செய்தி

தமிழ்நாடு

பிற மாநில தொழிலாளர்களுக்கு

Added : மே 01, 2021
Share
Advertisement
சென்னை : கொரோனா காலத்தில், வெளி மாநில தொழிலாளர்கள், தமிழகத்தில் தங்கி பணிபுரியும் பொருட்டு, தொழிலாளர் நலத்துறை சார்பில், கட்டுப்பாட்டு அறை மற்றும் உதவி மைய எண்கள் வழங்கப்பட்டு உள்ளன. இது குறித்து, தொழிலாளர் நலத்துறை சார்பில் வெளியிட்ட செய்தி குறிப்பு:கொரோனா தொற்று, இரண்டாவது அலையால், வெளி மாநில தொழிலாளர்கள், சொந்த ஊருக்கு திரும்ப, ரயில், பஸ் நிலையங்களில் கூடுவது

சென்னை : கொரோனா காலத்தில், வெளி மாநில தொழிலாளர்கள், தமிழகத்தில் தங்கி பணிபுரியும் பொருட்டு, தொழிலாளர் நலத்துறை சார்பில், கட்டுப்பாட்டு அறை மற்றும் உதவி மைய எண்கள் வழங்கப்பட்டு உள்ளன.

இது குறித்து, தொழிலாளர் நலத்துறை சார்பில் வெளியிட்ட செய்தி குறிப்பு:கொரோனா தொற்று, இரண்டாவது அலையால், வெளி மாநில தொழிலாளர்கள், சொந்த ஊருக்கு திரும்ப, ரயில், பஸ் நிலையங்களில் கூடுவது தெரிகிறது. அவர்கள், சொந்த ஊருக்கு திரும்பாமல், தமிழகத்தில் தங்கி பணிபுரியும் சூழலை உருவாக்க, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.வெளி மாநில தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில், தங்கள் குறைகள், கோரிக்கைகள் தெரிவிக்க, மாநில கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. தினமும் காலை, 8:00 முதல், இரவு, 8:00 மணி வரை, 044- - 2432 1438, 044- - 2432 1408 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

அதேபோல், சென்னையில் உள்ள வர்த்தக நிறுவனங்களில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்களுக்கு உதவ, சென்னை மாவட்டத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு உள்ளது.தங்கள் கோரிக்கைகளை கீழ்க்காணும் அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X