பொது செய்தி

தமிழ்நாடு

கோவை, திருப்பூருக்கு குறையாத வடமாநிலத்தினர் வருகை

Added : மே 01, 2021
Share
Advertisement
திருப்பூர் : கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்தாலும், தொழில், வேலைவாய்ப்பு தேடி கோவை, திருப்பூருக்கு ரயிலில் வரும் வடமாநிலத்தினர் எண்ணிக்கை குறையவில்லை. தொழில், வேலைவாய்ப்பு தமிழகத்தில் குவிந்து கிடப்பதால், வடமாநிலங்களில் இருந்து ரயிலில் மூலம், தினமும், 10 ஆயிரம் பேர் வரை, தமிழகம் வருகின்றனர். ஜவுளி, பின்னலாடை உள்ளிட்ட தொழிற்சாலைகளில் பணிபுரிய கோவை, திருப்பூர், ஈரோடு

திருப்பூர் : கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்தாலும், தொழில், வேலைவாய்ப்பு தேடி கோவை, திருப்பூருக்கு ரயிலில் வரும் வடமாநிலத்தினர் எண்ணிக்கை குறையவில்லை.

தொழில், வேலைவாய்ப்பு தமிழகத்தில் குவிந்து கிடப்பதால், வடமாநிலங்களில் இருந்து ரயிலில் மூலம், தினமும், 10 ஆயிரம் பேர் வரை, தமிழகம் வருகின்றனர். ஜவுளி, பின்னலாடை உள்ளிட்ட தொழிற்சாலைகளில் பணிபுரிய கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய நகரங்களுக்கு ரயில் மூலம், 2,000 பேர் வருகின்றனர்.நாடு முழுதும் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்துள்ளது. மகாராஷ்டிரா, டில்லி, கேரளா, கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு 'கிடுகிடு'வென உயர்ந்து வருகிறது.

தொற்று அச்சம் உள்ள போதும், வடமாநிலங்களில் இருந்து திருப்பூர், ஈரோடு, கோவைக்கு ரயிலில் வந்திறங்குவோர் எண்ணிக்கை வழக்கம் போல் தொடர்கிறது. இங்கிருந்து ரயிலில் செல்லவும் முன்பதிவு வழக்கம் போல் உள்ளது.கடந்த ஒரு வாரத்தில் திருப்பூரில் இருந்து, 8,756 பேர் டிக்கெட் முன்பதிவு செய்து ரயிலில் பயணித்துள்ளனர். பல்வேறு மாநிலங்களில் இருந்து, 14 ஆயிரத்து, 600 பேர் ரயிலில் திருப்பூர் வந்துள்ளனர்.முன்பதிவு மைய அதிகாரிகள் கூறுகையில், 'தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலில் இருந்தாலும், வடமாநில ரயிலில் பயணிப்போர், வந்திறங்குவோர் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இல்லை,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X