கேரளாவில் 2வது வாரமாக கட்டுப்பாடுகள் அமல்: தேக்கடி சுற்றுலாத்தலம் மூடல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கேரளாவில் 2வது வாரமாக கட்டுப்பாடுகள் அமல்: தேக்கடி சுற்றுலாத்தலம் மூடல்

Added : மே 01, 2021
Share
மூணாறு:கேரளாவில் முழு ஊரடங்குக்கு இணையாக சில தளர்வுகளுடன் நேற்று 2வது வாரமாக கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டது. தேக்கடி சுற்றுலாத் தலம் மூடப்பட்டது.மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் கடந்த வாரம் முதல் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கிற்கு இணையாக சில தளர்வுகளுடன் கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி மளிகை, காய்கறி, பழம், பால், மீன், இறைச்சி
 கேரளாவில் 2வது வாரமாக கட்டுப்பாடுகள் அமல்: தேக்கடி சுற்றுலாத்தலம் மூடல்

மூணாறு:கேரளாவில் முழு ஊரடங்குக்கு இணையாக சில தளர்வுகளுடன் நேற்று 2வது வாரமாக கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டது. தேக்கடி சுற்றுலாத் தலம் மூடப்பட்டது.

மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் கடந்த வாரம் முதல் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கிற்கு இணையாக சில தளர்வுகளுடன் கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி மளிகை, காய்கறி, பழம், பால், மீன், இறைச்சி கடைகள் திறந்திருக்கும். அவசர பயன்பாட்டுக்கு மட்டும் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. மற்றவற்றுக்கு அனுமதியில்லை.

2வது வாரமாக நேற்று இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டது. இன்றும் இந்த விதிமுறைகள் அமலில் இருக்கும்.மூணாறில் கொரோனா தொடர்பாக அரசின் நெறிமுறைகள் நேற்று கடுமையாக பின்பற்றப்பட்டது. அத்தியாவசிய கடைகள் திறந்தாலும் கட்டுப்பாடுகளால் பொதுமக்கள் வராததால் நகர் வெறிச்சோடியது.


தேக்கடி

கொரோனா பரவலால் பெரியாறு புலிகள் சரணாலயத்தில் உள்ள தேக்கடி சுற்றுலாத்தலம் நேற்று முதல் மூடப்பட்டது. படகு சவாரி, யானை சவாரி, வனப்பகுதியில் டிரக்கிங் உள்ளிட்ட அனைத்திற்கும் தடை விதித்து கேரள சுற்றுலா கழகம் அறிவித்துள்ளது. தனியார் சுற்றுலா மையங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை இத்தடை தொடரும். கொரோனாவால் 2020ல் மார்ச் முதல் நவம்பர் வரை தேக்கடி மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X