பொது செய்தி

இந்தியா

ரஷ்ய தடுப்பூசி இந்தியா வந்தது

Added : மே 01, 2021
Share
Advertisement
புதுடில்லி:ரஷ்யாவில் தயாரிக்கப்படும், 'ஸ்புட்னிக் வி' தடுப்பூசி, தெலுங்கானா மாநிலம் ஐதராபாதுக்கு, நேற்று வந்து சேர்ந்தது.கொரோனாவுக்கு எதிராக, நம் நாட்டில், இரண்டு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ள நிலையில், தடுப்பூசி தேவை அதிகரித்துள்ளது. மேலும், 18 - 44 வயதுக்குட்பட்டோருக்கும் தடுப்பூசி வழங்கப்படும் என, மத்திய அரசு

புதுடில்லி:ரஷ்யாவில் தயாரிக்கப்படும், 'ஸ்புட்னிக் வி' தடுப்பூசி, தெலுங்கானா மாநிலம் ஐதராபாதுக்கு, நேற்று வந்து சேர்ந்தது.

கொரோனாவுக்கு எதிராக, நம் நாட்டில், இரண்டு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ள நிலையில், தடுப்பூசி தேவை அதிகரித்துள்ளது. மேலும், 18 - 44 வயதுக்குட்பட்டோருக்கும் தடுப்பூசி வழங்கப்படும் என, மத்திய அரசு அறிவித்தது.

இதையடுத்து, ரஷ்யாவில் தயாரிக்கப்படும், ஸ்புட்னிக் வி தடுப்பூசியை பயன்படுத்த, மத்திய அரசு, கடந்த மாதம் அனுமதி வழங்கியது. இதன்படி, ரஷ்யாவில் இருந்து முதல்கட்டமாக அனுப்பப்பட்டுள்ள தடுப்பூசிகள், தெலுங்கானா மாநிலம், ஐதராபாதுக்கு, நேற்று வந்து சேர்ந்தன.

ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் அமைப்புடன், இந்தியாவைச் சேர்ந்த, 'டாக்டர் ரெட்டிஸ்' நிறுவனம், இது தொடர்பாக ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி, ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கான பரிசோதனையில், டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X