பொது செய்தி

இந்தியா

சோனுசூட் புகார்: சீன துாதர் மழுப்பல்

Added : மே 01, 2021
Share
Advertisement
புதுடில்லி:'இந்தியாவுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் அனுப்புவதை, சீனா தடுக்கிறது' என, பாலிவுட் நடிகர், சோனுசூட் தெரிவித்த புகாருக்கு, அந்நாட்டு துாதர் மழுப்பலான விளக்கம் அளித்துள்ளார். மஹாராஷ்டிராவில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் பயன்படுத்துவதற்காக, சீனாவில் இருந்து ஏராளமான ஆக்சிஜன் செறிவூட்டிகளை இறக்குமதி செய்ய, பாலிவுட் நடிகர் சோனுசூட் 'ஆர்டர்' கொடுத்ததாக

புதுடில்லி:'இந்தியாவுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் அனுப்புவதை, சீனா தடுக்கிறது' என, பாலிவுட் நடிகர், சோனுசூட் தெரிவித்த புகாருக்கு, அந்நாட்டு துாதர் மழுப்பலான விளக்கம் அளித்துள்ளார்.

மஹாராஷ்டிராவில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் பயன்படுத்துவதற்காக, சீனாவில் இருந்து ஏராளமான ஆக்சிஜன் செறிவூட்டிகளை இறக்குமதி செய்ய, பாலிவுட் நடிகர் சோனுசூட் 'ஆர்டர்' கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தியாவுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் ஏற்றுமதி செய்வதை, சீன அரசு தடுப்பதாக, சோனுசூட் பரபரப்பு புகார் தெரிவித்திருந்தார்.

இது குறித்து, சீனாவுக்கான இந்திய துாதர் சன் வெய்டாங் கூறியிருப்பதாவது:சோனுசூட்டின் புகாரை, டுவிட்டரில் பார்த்தேன். எனக்கு தெரிந்தவரை, சீனாவில் இருந்து இந்தியாவுக்கு வழக்கமான விமான சேவை நடக்கிறது. கடந்த இரு வாரங்களில், சீனாவில் இருந்து, இந்தியாவுக்கு, 61 சரக்கு விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. கொரோனாவுக்கு எதிரான போரில், இந்தியாவுக்கு, சீனா முழு ஆதரவை அளிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம், சீன அதிபர் ஜின்பிங், இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் குறித்து, பிரதமர் மோடிக்கு அனுதாபச் செய்தி அனுப்பியிருந்தார். அதில், கொரோனா சவாலை சமாளிக்க, இந்தியாவுக்கு சீனா உதவும் என்றும் கூறியிருந்தார். ஆனால், அதற்கு மாறாக சீனா நடந்து கொள்வதாக, சோனுசூட் தெரிவித்த புகாரை மறுக்காமல், சன் வெய்டாங் மழுப்பியிருப்பது உண்மை நிலவரத்தை காட்டுவதாக, அரசியல் நோக்கர்கள் தெரிவித்து உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X