பொது செய்தி

இந்தியா

டில்லியில் ஊரடங்கு ஒரு வாரம் நீட்டிப்பு

Added : மே 01, 2021
Share
Advertisement
புதுடில்லி:டில்லியில், ஊரடங்கு கட்டுப்பாடுகள், மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகள், தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வைரஸ் பரவலை தடுக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, ஏப்., 19ம் தேதி, ஆறு நாட்களுக்கு

புதுடில்லி:டில்லியில், ஊரடங்கு கட்டுப்பாடுகள், மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகள், தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வைரஸ் பரவலை தடுக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, ஏப்., 19ம் தேதி, ஆறு நாட்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. பின், ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு, நாளையுடன் நிறைவடைய இருந்தது.

இந்நிலையில், டில்லியில் இதுவரை கொரோனா பரவல் கட்டுக்குள் வராததால், ஊரடங்கு கட்டுப்பாடுகள், மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளன.


இணையதளம் அறிமுகம்

டில்லியில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய மக்களிடம் இருந்து நன்கொடை பெறுவதற்கு, பிரத்யேகமாக ஒரு இணையதள பக்கத்தை, டில்லி அரசு அறிமுகம் செய்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X