பொது செய்தி

இந்தியா

தடுப்பூசி தயாரிப்பாளர் லண்டனுக்கு பறந்தார்

Updated : மே 01, 2021 | Added : மே 01, 2021 | கருத்துகள் (22)
Share
Advertisement
புதுடில்லி:முக்கிய பிரமுகர்களின் நெருக்கடி தாங்காமல், லண்டனுக்கு குடும்பத்துடன் பறந்த, தடுப்பூசி மருந்து தயாரிப்பாளர் அடர் பூனாவாலா, மேலும் சில காலம் அங்கேயே தங்கியிருக்க முடிவு செய்துள்ளார். மஹாராஷ்டிரா மாநிலம், புனேவைச் சேர்ந்த, சீரம் இன்ஸ்ட்டிட்யூட் நிறுவனம், 'கோவிஷீல்டு' என்ற கொரோனா தடுப்பூசி மருந்தை தயாரிக்கிறது. கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால்,
தடுப்பூசி, தயாரிப்பாளர், லண்டன், பறந்தார்

புதுடில்லி:முக்கிய பிரமுகர்களின் நெருக்கடி தாங்காமல், லண்டனுக்கு குடும்பத்துடன் பறந்த, தடுப்பூசி மருந்து தயாரிப்பாளர் அடர் பூனாவாலா, மேலும் சில காலம் அங்கேயே தங்கியிருக்க முடிவு செய்துள்ளார்.

மஹாராஷ்டிரா மாநிலம், புனேவைச் சேர்ந்த, சீரம் இன்ஸ்ட்டிட்யூட் நிறுவனம், 'கோவிஷீல்டு' என்ற கொரோனா தடுப்பூசி மருந்தை தயாரிக்கிறது. கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால், இந்திய மக்களிடம் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அடர் பூனாவாலாவுக்கு, தடுப்பூசி கேட்டு, முக்கிய பிரமுகர்களிடம் இருந்து, கடும் நெருக்கடி, மிரட்டல் வந்துள்ளதாக தெரிகிறது.

அதனால், கடந்த வாரம் அவருக்கு, 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்க, அரசு உத்தரவிட்டது. இதற்கிடையே, தடுப்பூசி கேட்டு தொல்லை கொடுப்போரிடம் இருந்து தப்பிக்க, பூனாவாலா, மனைவி, குழந்தைகளுடன், ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனுக்குச் சென்று விட்டார்.

அங்கு அவர் கூறியதாவது: இந்தியாவின் தற்போதைய சூழலில், நான் லண்டனில் மேலும் சில காலம் தங்கியிருக்க முடிவு செய்துள்ளேன். அனைத்துச் சுமையும் என் தோளில் விழுந்துள்ளது. என்னால் எதுவும் செய்ய இயலவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
02-மே-202110:15:31 IST Report Abuse
Natarajan Ramanathan இவர் அரசியல்வாதிகளின் அழுத்தம் தாங்காமல்தான் இப்படி சென்றுள்ளார். இவரது நிறுவனம் தொடர்ந்து மருந்து தயாரிக்கும். எனவே மக்களுக்கு பாதிப்பு ஏதும் இருக்காது. இதுபோலத்தான் பண மதிப்பிழப்பு சமயத்தில் அரசு வங்கி மேனேஜர்களுக்கு அரசியல்வாதிகளிடம் இருந்து பயங்கரஅழுத்தம் வந்தது. ஆனால் எங்களிடம் சொந்த விமானம் இல்லையே
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
02-மே-202114:44:27 IST Report Abuse
தமிழவேல் உங்களால எதுவுமே செய்ய முடியலையா ? கையாலாகாத்தனமா ?...
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
02-மே-202108:44:16 IST Report Abuse
VENKATASUBRAMANIAN தலபுராணம் வாங்கி கொடுத்தாரா. எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று கூறக்கூடாது. கடன் கொடுத்து ஓட செய்தது காங்கிரஸ். அதை திருப்பி வரவழைப்பது பிஜேபி. ஆனால் மோடியை குறை சொல்லுவதே வேலை
Rate this:
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன்4500 கோடி முன்பணம் கிடைத்துள்ளதே...
Rate this:
Cancel
thamodaran chinnasamy - chennai,இந்தியா
02-மே-202108:18:40 IST Report Abuse
thamodaran chinnasamy இவரின் இந்த மாபாதகச்செயல் ஏற்கக்கூடிய ஒன்றல்ல , இதை அரசும் நீதித்துறையும் உற்று நோக்க வேண்டும் . அவரின் இந்த கூற்ற்றுக்கு என்ன யார் காரணம் என்பதை தெரியப்படுத்தவேண்டும் . இக்கட்டான இந்த நேரத்தில் அவர் சற்றும் பொறுப்பில்லாமல் இது போன்று பேசுவது நல்ல ஒரு தொழிலதிபருக்கு அழகல்ல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X