அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதன் முறையாக முதல்வராகிறார் ஸ்டாலின் !

Updated : மே 02, 2021 | Added : மே 01, 2021 | கருத்துகள் (37)
Share
Advertisement
புதுடில்லி : நடந்து முடிந்த தேர்தலில் இன்று நடந்த ஓட்டு எண்ணிக்கையில் தமிழகத்தில் திமுக அறுதிபெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடிக்கிறது. இது போல் அசாமில் பா.ஜ.,வும், மே.வங்கத்தில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரசும், கேரளாவில் இடது சாரியும் மீண்டும் ஆட்சியை தக்க வைக்கிறது. புதுச்சேரியில் பா.ஜ., தலைமையிலான கூட்டணி அரசு அமையவுள்ளது. கருணாநிதி காலத்தில் துணை முதல்வராக இருந்த
தமிழகம், தேர்தல் ஓட்டு, இன்று எண்ணிக்கை,

புதுடில்லி : நடந்து முடிந்த தேர்தலில் இன்று நடந்த ஓட்டு எண்ணிக்கையில் தமிழகத்தில் திமுக அறுதிபெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடிக்கிறது. இது போல் அசாமில் பா.ஜ.,வும், மே.வங்கத்தில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரசும், கேரளாவில் இடது சாரியும் மீண்டும் ஆட்சியை தக்க வைக்கிறது. புதுச்சேரியில் பா.ஜ., தலைமையிலான கூட்டணி அரசு அமையவுள்ளது. கருணாநிதி காலத்தில் துணை முதல்வராக இருந்த ஸ்டாலின் முதன்முறையாக முதல்வராகிறார். இன்று இரவுக்குள், முழு நிலவரம் தெரிந்து விடும்.

மக்கள் நீதிமய்ய கட்சியை துவக்கி குறுகிய காலத்தில் தேர்தலை சந்தித்த கமல் மட்டும் அவரது தொகுதியில் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் முந்தி வருகிறார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் துவக்கிய தினகரன் அவரது தொகுதியில் மட்டும் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் முந்தியும், பிந்தியும் வருகிறார். சீமானின் நாம் தமிழர் கட்சி பல்வேறு தொகுதிகளில் 3 வது இடத்திற்கு வந்துள்ளது.தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலங்களில், கடந்த மாதம் சட்டசபை தேர்தல் நடந்தது.தமிழகத்தில், சட்ட சபை தேர்தலுடன், காலியாக உள்ள கன்னியாகுமரி லோக்சபா தொகுதிக்கான இடைத்தேர்தலும், ஏப்., 6ல் நடந்தது.ஐந்து மாநிலங்களிலும் பதிவான ஓட்டுகள், இன்று காலை, 8:00 மணிக்கு எண்ணப்பட்டு வருகிறது.


கடும் போட்டி


தமிழகத்தின், 234 தொகுதிகளிலும், அ.தி.மு.க., கூட்டணி, தி.மு.க., கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, அ.ம.மு.க., கூட்டணி கட்சிகள் போட்டியிட்டன.நாம் தமிழர் கட்சி, 234 தொகுதிகளிலும் தனித்து களம் இறங்கியது.


தி.மு.க., மகிழ்ச்சி


தேர்தலுக்கு முந்தைய, ஓட்டுப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்தும், தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்று, ஆட்சியை பிடிக்கும் என்றே கூறின.பெரும்பாலான கணிப்புகள், தி.மு.க., கூட்டணி, 150 தொகுதிகளுக்கு மேல் வெல்லும் என்றே தெரிவித்து உள்ளன.


அ.தி.மு.க., நம்பிக்கை


அதேநேரம், கருத்துக் கணிப்புகள் குறித்து கவலைப்படாமல், தொடர்ந்து மூன்றாவது முறையாக, 'ஹாட்ரிக்' வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைப்போம் என்று, உறுதியான நம்பிக்கையுடன், அ.தி.மு.க.,வினர் உள்ளனர்.கடந்த சட்டசபை தேர்தலில், கருத்துக் கணிப்பை தவிடுபொடியாக்கி, தொடர்ந்து இரண்டாவது முறையாக, அ.தி.மு.க., ஆட்சியை பிடித்தது.இந்த முறையும் அது நடக்கும்; எங்கள் கூட்டணி, 124 முதல், 130 இடங்களில் வெற்றி பெறும் என, நம்பிக்கையுடன் அக்கட்சியினர் கூறினர்.

இரு தரப்பினரும், ஆட்சி தங்களுக்கே என்ற நம்பிக்கையுடன், ஓட்டு எண்ணிக்கை முடிவை எதிர்பார்த்தபடி உள்ளனர்.மற்ற கட்சியினர் ஒரு சில தொகுதிகளிலாவது வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன், ஒட்டு மொத்தமாக தங்கள் ஓட்டு சதவீதம் எவ்வளவு உயர்ந்துள்ளது என்பதை அறிய, ஆவலுடன் உள்ளனர். காலை, 8:30 மணி முதல் ஓட்டு எண்ணிக்கை முடிவுகள் வெளி வரந்து கொண்டிருக்கிறது .


latest tamil news
latest tamil news

latest tamil news
மற்ற மாநிலங்கள்


இதேபோல, சட்டசபை தேர்தல் நடந்த புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களிலும், ஆட்சி அமைக்கப் போவது யார் என்பது ஒரளவுக்கு முடிவாகி விட்டது.


இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை சுத்தம்

''தமிழகத்தில் ஓட்டுகள் எண்ணப்படும் அறைகள், இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை, கிருமி நாசினியால் சுத்தம் செய்யப்படும்,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி:தமிழகம் முழுதும், ஓட்டு எண்ணிக்கை, 75 மையங்களில் நடக்க உள்ளது.
இந்த மையங்களில், 5,622 துணை ராணுவ வீரர்கள்; 5,154 தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர்; 25 ஆயிரத்து, 59 போலீசார் என, மொத்தம், 35 ஆயிரத்து, 836 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். மற்ற போலீசார், பிற பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.

ஓட்டு எண்ணிக்கை நடக்கும் அறைகள், இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை, கிருமி நாசினியால் சுத்தம் செய்யப்படும். கொரோனா தொற்று காரணமாக, 10 பொதுப் பார்வையாளர்கள், ஆறு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.கடந்த, 2016 சட்டசபை தேர்தலில், மூன்று லட்சத்து, 30 ஆயிரத்து, 380 பேர், தபால் ஓட்டுகளை பதிவு செய்திருந்தனர். இந்த தேர்தலில், நேற்று முன்தினம் வரை, ஐந்து லட்சத்து, 64 ஆயிரத்து, 253 பேர் தபால் ஓட்டுகள் போட்டுள்ளனர்.இவ்வாறு சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.


இணையதளத்தில் தேர்தல் முடிவு

தேர்தல் முடிவுகளை, தேர்தல் கமிஷனின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் மாநிலங்களில் நடந்த, சட்டசபை பொதுத் தேர்தலின் ஓட்டு எண்ணிக்கை, இன்று நடக்கிறது. அதேபோல, பல்வேறு மாநிலங்களில் நடந்த, இடைத்தேர்தல்களின் ஓட்டு எண்ணிக்கையும் நடக்கிறது.
தேர்தல் முடிவுகளை, https://results.eci.gov.in, https://elections.tn.gov.in என்ற, தேர்தல் கமிஷன் இணையதளங்களில், உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம். - நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathyanarayanan Subramanian - Tambaram,இந்தியா
02-மே-202120:41:27 IST Report Abuse
Sathyanarayanan Subramanian மக்கள் தான் உஷாராக இருக்க வேண்டும். திருடர்கள் ஜாக்கிரதை
Rate this:
Cancel
Sathyanarayanan Subramanian - Tambaram,இந்தியா
02-மே-202120:40:15 IST Report Abuse
Sathyanarayanan Subramanian பாவம். முதல்வராக இருந்துவிட்டு போகட்டும்
Rate this:
Cancel
Sivaraman - chennai ,இந்தியா
02-மே-202120:09:59 IST Report Abuse
Sivaraman இந்த வெற்றி பெற முதல் காரணம் ஒன்றுபட்ட அண்ணாதிமுக இல்லாமல் போனது . இரண்டாவது பத்து ஆண்டு ஆட்சியில் கொரோன சூழ்நிலையில் மக்களுக்கு எதோ ஒரு வெறுப்பான மனமாற்றம் . மூன்றாவது புதிய தமிழகம் போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்காமல் சாதி வாரி இடஒதுக்கீட்டுக்கு சம்மதித்தது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X