பொது செய்தி

இந்தியா

ஆக்சிஜன் இறக்குமதி தனிநபர்களுக்கு அனுமதி

Added : மே 01, 2021
Share
Advertisement
புதுடில்லி:கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில், ஆக்சிஜன் செறிவூட்டியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு, தனிநபர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை மிகத் தீவிரமாக உள்ளது. ஆக்சிஜன், மருந்துகள், தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆக்சிஜன் செறிவூட்டிகளுக்கான தேவை அதிகரித்துள்ளது.இவற்றை வெளிநாடுகளில் இருந்து

புதுடில்லி:கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில், ஆக்சிஜன் செறிவூட்டியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு, தனிநபர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை மிகத் தீவிரமாக உள்ளது. ஆக்சிஜன், மருந்துகள், தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆக்சிஜன் செறிவூட்டிகளுக்கான தேவை அதிகரித்துள்ளது.இவற்றை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இது குறித்து மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: ஆக்சிஜன் செறிவூட்டி களை, தனிநபர் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு அனுமதிக்கும் வகையில், அன்னிய வர்த்தக கொள்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, ஆக்சிஜன் செறிவூட்டிகளை, 'பரிசு' என்ற அடிப்படையில், வெளிநாட்டில் இருந்து வாங்கி கொள்ளலாம். தபால், கொரியர், மின்னணு வர்த்தக இணையதளங்கள் வாயிலாக வாங்கி கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X