அரசியல் செய்தி

தமிழ்நாடு

கருத்து கணிப்புகளை தாண்டி சிறப்பான வெற்றி: தினகரன்

Added : மே 01, 2021
Share
Advertisement
சென்னை:'கருத்துக் கணிப்புகளை தாண்டி, நம்முடைய கூட்டணி, சிறப்பான வெற்றியை பெற இருக்கிறது' என, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் தெரிவித்துள்ளார்.கட்சியினருக்கு அவர் எழுதியுள்ள கடிதம்:தமிழக அரசியல் வரலாற்றில், முக்கியத்துவம் வாய்ந்த, சட்டசபை தேர்தல் முடிவுகள், இன்று வெளியாகின்றன. கருத்து கணிப்புகளை தாண்டி, நம்முடைய கூட்டணி, சிறப்பான வெற்றியை பெற உள்ளது.வாரி

சென்னை:'கருத்துக் கணிப்புகளை தாண்டி, நம்முடைய கூட்டணி, சிறப்பான வெற்றியை பெற இருக்கிறது' என, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் தெரிவித்துள்ளார்.

கட்சியினருக்கு அவர் எழுதியுள்ள கடிதம்:தமிழக அரசியல் வரலாற்றில், முக்கியத்துவம் வாய்ந்த, சட்டசபை தேர்தல் முடிவுகள், இன்று வெளியாகின்றன. கருத்து கணிப்புகளை தாண்டி, நம்முடைய கூட்டணி, சிறப்பான வெற்றியை பெற உள்ளது.

வாரி இறைக்கப்பட்ட, பண மூட்டைகளையும், வாக்குறுதிகள் என்ற பெயரில், நடைமுறைக்கு சாத்தியமில்லாத பொய் மூட்டைகளையும் கடந்து, நாம் அழுத்தமான முத்திரையை பதிக்கப் போகிறோம். அத்தகைய மகத்தான வெற்றியை உறுதி செய்ய, ஓட்டு எண்ணும் மையங்களில் இருப்பவர்கள், முழு கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம்.

எந்த சுற்றிலும், ஓட்டு எண்ணிக்கையின் போக்கு மாறலாம். சிறிய கவனப்பிசகோ, மனச்சோர்வோ, சுணக்கமோ ஏற்பட்டாலும், அது நமது வெற்றியை சேதப்படுத்தி விடும். எனவே, ஓட்டு எண்ணிக் கையிலும், கொள்கை காத்திடும் செயல்வீரர்களாக, உறுதியோடு நிற்க வேண்டும்.தேர்தல் கமிஷன் அறிவுறுத்தல்படி, கொரோனா தடுப்பு வழிமுறைகளையும், சரியாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

தங்களின் பாதுகாப்பும், குடும்பத்தாரின் பாதுகாப்பும் மிகவும் முக்கியம். கட்சியினர் யாருக்கும், எந்த பாதிப்பும் இல்லாமல், நம்முடைய இலக்கை வென்றெடுத்து, வாகை சூடினோம் என்பதே, மிகுந்த மகிழ்ச்சி தரும் செய்தியாக இருக்கும்.இவ்வாறு, தினகரன் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X