பொது செய்தி

தமிழ்நாடு

விழுப்புரத்தில் கொரோனா அதிகரிப்புதெருக்களில் தடுப்பு அமைத்து மூடல்

Added : மே 01, 2021
Share
Advertisement
விழுப்புரம்: விழுப்புரத்தில் கொரோனா தொற்று அதிகமாக உள்ள தெருக்களுக்கு நகராட்சி அதிகாரிகள் தடுப்பு கட்டைகள் அமைத்து தடை விதித்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு, நாள் அதிகரித்து வருகின்றது.இந்நிலையில், ஒரே தெருவில் 3 வீடுகளில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டால், அந்த தெருவை சுற்றி தடுப்புகள் அமைத்து, தடை செய்யப்பட்ட பகுதியாக

விழுப்புரம்: விழுப்புரத்தில் கொரோனா தொற்று அதிகமாக உள்ள தெருக்களுக்கு நகராட்சி அதிகாரிகள் தடுப்பு கட்டைகள் அமைத்து தடை விதித்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு, நாள் அதிகரித்து வருகின்றது.இந்நிலையில், ஒரே தெருவில் 3 வீடுகளில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டால், அந்த தெருவை சுற்றி தடுப்புகள் அமைத்து, தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு வருகின்றது.அதன்படி, விழுப்புரம் நகராட்சி நந்தனார் தெரு, சகுந்தலா நகர், சங்கரமட தெரு, காமராஜர் வீதி, கணபதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரே தெருவில் மூன்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், நகராட்சி மூலம் இந்த தெருக்களில் தடுப்பு கட்டைகள் அமைத்து, கொரோனா தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளனர்.முன்னதாக, காமராஜர் சாலையில் தடுப்பு கட்டைகள் அமைத்தபோது, வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.தகவலறிந்த விழுப்புரம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பின், வியாபாரிகள் கலெக்டர் அண்ணாதுரையை சந்தித்து முறையிட்டனர். இதையடுத்து, காமராஜர் தெருவில், இருசக்கர வாகனங்கள் செல்வதற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X