கொரோனா தொற்று அச்சத்தில் கலைஞர்கள் சின்னத்திரை படப்பிடிப்புகள் நிறுத்தப்படுமா?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தொற்று அச்சத்தில் கலைஞர்கள் சின்னத்திரை படப்பிடிப்புகள் நிறுத்தப்படுமா?

Added : மே 01, 2021
Share
சென்னை:சின்னத்திரை படப்பிடிப்புகளில், கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதில்லை என்ற, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், கலைஞர்கள் மத்தியில் கொரோனா அச்சம் ஏற்பட்டு உள்ளது.தமிழகம் முழுதும், கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஞாயிறு முழு ஊரடங்கு, தியேட்டர்கள் உள்ளிட்ட, மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மூடல் போன்ற, பல்வேறு கட்டுப்பாடு களை, தமிழக அரசு

சென்னை:சின்னத்திரை படப்பிடிப்புகளில், கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதில்லை என்ற, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், கலைஞர்கள் மத்தியில் கொரோனா அச்சம் ஏற்பட்டு உள்ளது.

தமிழகம் முழுதும், கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஞாயிறு முழு ஊரடங்கு, தியேட்டர்கள் உள்ளிட்ட, மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மூடல் போன்ற, பல்வேறு கட்டுப்பாடு களை, தமிழக அரசு முன்னெடுத்துள்ளது. இருப்பினும், கொரோனா பரவல் அதிகரிப்பதால், முழு ஊரடங்கு விதிக்கப்படுமா என்ற கேள்வியும், மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதனிடையே, கொரோனா அச்சம் காரணமாக, உச்ச நடிகர்களின் படப்பிடிப்புகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன.

ஆனால், சின்னத்திரை படப்பிடிப்புகள் மட்டும், இரவு பகலாக நடத்தப்படுகிறது. கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காமல், 100க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் கூடுவதால், கலைஞர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. நாடக நடிகர்கள் சிலர், 'சில காலத்திற்கு படப்பிடிப்புகளை தள்ளி வைக்க வேண்டும்' என, சம்பந்தப்பட்ட சின்னத்திரை நிர்வாகத்திடம் எடுத்துக் கூறியுள்ளனர். ஆனால், அதை காதில் வாங்காமல் படப்பிடிப்பு தொடர்கிறது.

இது குறித்து சின்னத் திரை கலைஞர்கள் சிலர் கூறியதாவது:ஐந்து நடிகர்கள் பங்கேற்கும் ஒரு சீரியல் படப்பிடிப்புக்கு, உதவியாளர், கேமரா மேன், புரொடக்சன், லைட்மேன், டெக்னிஷியன் உட்பட, 80 முதல், 100 பேர் வரை பணியாற்றுகின்றனர். ஒரு சில சீரியல் படப்பிடிப்பில் மட்டுமே, சமூக இடைவெளியை பின்பற்றுகின்றனர்.

பலவற்றில் முக கவசம் பயன்படுத்துவதே இல்லை. யாராவது தும்மினால் கூட, செட்டில் ஒரு வித பீதி ஏற்படுகிறது.தற்போது, பெரும்பாலான சீரியல்களில், பழைய காட்சிகளையே திரையிடுகின்றனர். மீண்டும் முழு ஊரடங்கு வரலாம் என யோசித்து, அந்த நாட்களுக்கு போட வேண்டிய காட்சிகளுக்காக, சிலர் அவசர அவசரமாக, இரவு, பகல் பாராமல், கலைஞர்களுக்கு விடுமுறை கூட தராமல், படப்பிடிப்பை நடத்துகின்றனர். படப்பிடிப்பை சில காலத்திற்கு ஒத்தி வைத்தால், கலைஞர்களுக்கும், சின்னத்திரை நிர்வாகத்திற்கும் பாதிப்பு ஏற்படாது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X