சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணல் கடத்தியவர்கள் கைது

Added : மே 01, 2021
Share
Advertisement
வானூர்: புதுச்சேரியில் இருந்து வானுார் பகுதிக்கு மினிலாரியில் ஆற்று மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரி, தேத்தாம்பாக்கம் ஆற்றில் இருந்து வானுார் பகுதிக்கு மணல் கடத்துவதாக நேற்று முன்தினம் வானுார் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து, கிராம நிர்வாக அலுவலர் மதன்ராஜ் ஒட்டை கிராமத்தில், வாகன சோதனை மேற்கொண்டனார். அப்போது,

வானூர்: புதுச்சேரியில் இருந்து வானுார் பகுதிக்கு மினிலாரியில் ஆற்று மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரி, தேத்தாம்பாக்கம் ஆற்றில் இருந்து வானுார் பகுதிக்கு மணல் கடத்துவதாக நேற்று முன்தினம் வானுார் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து, கிராம நிர்வாக அலுவலர் மதன்ராஜ் ஒட்டை கிராமத்தில், வாகன சோதனை மேற்கொண்டனார். அப்போது, அவ்வழியே வந்த பிஒய்.05.ஒய்.5712 பதிவெண் கொண்ட மினிலாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், ஒரு யூனிட் மணல் கடத்தியது தெரிய வந்தது.அதனையொட்டி மணலுடன், மினிலாரியை பறிமுதல் செய்து, வானுார் போலீசில் ஒப்படைத்தனர்.அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து, மினிலாரி டிரைவரான, வழுதாவூரை சேர்ந்த முருகன் மகன் ஆனந்த்,24; என்பவரை கைது செய்தனர்.விழுப்புரம்வளவனுார் சப்-இன்ஸ்பெக்டர் பலராமன் தலைமையிலான போலீசார் நேற்று சொரப்பூர் கிராமத்தில் ரோந்து சென்றனர். அங்கு, மலட்டாற்றில் இருந்து மணல் கடத்தி வந்த டிராக்டர் டிப்பரை மடக்கி பிடித்து பறிமுதல் செய்தனர்.இதுதொடர்பாக வழக்கு பதிந்து அதேபகுதியை சேர்ந்த ஜெயக்குமார்,25; என்பவரை கைது செய்தனர். ராஜி என்பவரை தேடிவருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X