அரசியல் செய்தி

தமிழ்நாடு

'அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போட வேண்டும்'

Added : மே 01, 2021
Share
Advertisement
சென்னை:'அனைத்து மக்களுக்கும், இலவசமாக தடுப்பூசி போடும் பொறுப்பை, மத்திய அரசு ஏற்க வேண்டும்' என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:கொரோனா தொற்று காலத்தில், மக்கள் நடமாட்டம் குறைந்து, ஜனநாயக செயல்பாடுகள் முடங்கிய நிலையில், மத்திய அரசுக்கு தெளிவு ஏற்படுத்தும் வகையில், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதை வரவேற்கிறேன்.மத்திய அரசு, 50

சென்னை:'அனைத்து மக்களுக்கும், இலவசமாக தடுப்பூசி போடும் பொறுப்பை, மத்திய அரசு ஏற்க வேண்டும்' என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:கொரோனா தொற்று காலத்தில், மக்கள் நடமாட்டம் குறைந்து, ஜனநாயக செயல்பாடுகள் முடங்கிய நிலையில், மத்திய அரசுக்கு தெளிவு ஏற்படுத்தும் வகையில், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதை வரவேற்கிறேன்.

மத்திய அரசு, 50 சதவீதமும், மாநில அரசுகள், 50 சதவீதமும், கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய வேண்டும் என, அறிவுறுத்தியதை தவிர்த்து, மத்திய அரசே, 100 சதவீதம் தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய வேண்டும்.

மாநில அரசுகளுக்கு சரிசமமாக வினியோகம் செய்யலாம் என, உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது, இன்றைக்கு ஏற்பட்டுள்ள தடுப்பூசி தட்டுப்பாடுகளுக்கு, உரிய தீர்வாக அமையும். இந்தப் பின்னணியில், 18 வயது நிரம்பிய அனைத்து மக்களுக்கும், கடந்த கால அரசுகள் பொறுப்பேற்று கொண்டதை போல, மத்திய அரசு, அனைத்து மக்களுக்கும் இலவசமாக தடுப்பூசி போடுகிற பொறுப்பை ஏற்க வேண்டும்.

தனியார் உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து, மத்திய அரசு தடுப்பூசியை கொள்முதல் செய்து, மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும். உடனே தடுப்பூசி போட்டு, கொரோனா தொற்றின் பிடியில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டும்.இவ்வாறு, கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X