பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தனிமை மையம்

Added : மே 01, 2021
Share
Advertisement
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை தனியார் பள்ளியில் கொரோனா தனிமை மையம் திறக்க துாய்மை படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.விழுப்புரம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில், அதி தீவிரமான நோயாளிகள் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர்.அடுத்த நிலையில் தனிமைப் படுத்த வேண்டிய

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை தனியார் பள்ளியில் கொரோனா தனிமை மையம் திறக்க துாய்மை படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.விழுப்புரம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில், அதி தீவிரமான நோயாளிகள் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர்.அடுத்த நிலையில் தனிமைப் படுத்த வேண்டிய நோயாளிகள் விழுப்புரம், விக்கிரவாண்டி , வானுார் அரசு மருத்துவமனை என 3 இடங்களில் கொரோனா சிகிச்சை மையமும், புளிச்சபள்ளம், அரசூர், தனியார் கல்லுாரி, மேல் மலையனுார் போலீஸ் குடியிருப்பு, விழுப்புரம் சாலாமேடு அரசு ஆசிரியர் பயிற்சி கல்லுாரியிலும் என 4 தனிமை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு நிரம்பி வழிகிறது.தற்பொழுது நோய் தொற்று பரவல் அதிகரித்து வருவதை முன்னிட்டு நோய் தொற்றால் பாதிப்பவர்களை தனிமைப் படுத்த வேண்டி கூடுதலாக வி.சாலையில் உள்ள தனியார் பள்ளியில் மையம் திறக்க பணிகள் நடைபெற்று வருகிறது. விக்கிரவாண்டி பி.டி.ஓ.,க்கள் நந்தகோபாலகிருஷ்ணன் , முபாரக் அலி பேக் தலைமையில் துணை பி.டி.ஓ., நாகராஜ், ஊராட்சி செயலாளர்கள் அலமேலு, ஞானவேல், சக்தி, விஜயகுமார், கிராம துாய்மை காவலர், பணியாளர்கள் கொண்ட குழுவினர் வி.சாலை தனியார் பள்ளியில் 18 அறைகளையும் தண்ணீர் ஊற்றி சுத்தமாக கழுவி கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.இப்பள்ளியில் சுமார் 200 பேர் தங்க வைக்க மையம் தயார் செய்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X