அரசியல் செய்தி

தமிழ்நாடு

கட்டுப்பாடுகளை கட்சிகள் பின்பற்ற வேண்டும்: வாசன்

Added : மே 01, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை:'ஓட்டு எண்ணிக்கையின் போது, தேர்தல் கமிஷன் விதித்துள்ள கட்டுப்பாடுகளை, அனைத்து கட்சிகளும், தவறாமல் பின்பற்ற வேண்டும்' என, த.மா.கா., தலைவர் வாசன் கூறியுள்ளார்.அவரது அறிக்கை: சட்டசபை தேர்தல் முடிவுகள், இன்று அறிவிக்கப்பட உள்ளன. கொரோனா தாக்கம், தமிழகத்தில் அதிகரித்து வருவதால், ஓட்டு எண்ணிக்கை முகாம்களில், பல்வேறு கட்டுப்பாடுகளையும், கோட்பாடுகளையும் தேர்தல்
 கட்டுப்பாடுகளை கட்சிகள்  பின்பற்ற வேண்டும்: வாசன்

சென்னை:'ஓட்டு எண்ணிக்கையின் போது, தேர்தல் கமிஷன் விதித்துள்ள கட்டுப்பாடுகளை, அனைத்து கட்சிகளும், தவறாமல் பின்பற்ற வேண்டும்' என, த.மா.கா., தலைவர் வாசன் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை: சட்டசபை தேர்தல் முடிவுகள், இன்று அறிவிக்கப்பட உள்ளன. கொரோனா தாக்கம், தமிழகத்தில் அதிகரித்து வருவதால், ஓட்டு எண்ணிக்கை முகாம்களில், பல்வேறு கட்டுப்பாடுகளையும், கோட்பாடுகளையும் தேர்தல் கமிஷன் விதித்துள்ளது. தேர்தல் முடிவுகள் தெரிந்தவுடன், வெற்றி கொண்டாட்டங்கள் இருக்கக்கூடாது என, அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மட்டும், ஓட்டு எண்ணும் மையங்களுக்கு செல்ல வேண்டும். இந்த கட்டுப்பாடுகளையும், கோட்பாடுகளையும் அலட்சியம் செய்யாமல், அனைத்து கட்சிகளும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.தேர்தல் முடிவுகளை, உடனுக்குடன் முறைப்படி அறிவிக்க, தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்துள்ளது.

ஆகவே, முகாம்களுக்கு வேறு யாரும் செல்ல வேண்டாம்.அரசியல் கட்சியை சேர்ந்தவர்களின் வெற்றி உற்சாகம், எந்த விதத்திலும் கொரோனா பரவலுக்கு காரணமாக இருக்கக் கூடாது. தேர்தல் கமிஷனும், கலெக்டர்களும், போலீஸ் துறையும் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும்.இவ்வாறு, வாசன் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivas - Chennai,இந்தியா
02-மே-202111:31:53 IST Report Abuse
Srinivas அடிமைகொள்ளைக்கூட்டத்தோடவே ஐக்கியமாயிடு....அதுதான் உன்னோட அரசியல் அஸ்தமனம்.
Rate this:
Cancel
Srinivas - Chennai,இந்தியா
02-மே-202111:31:03 IST Report Abuse
Srinivas மூப்பனாருக்கு இருந்த நல்ல பெயரை கெடுக்க வந்த கோடாலிக்காம்பு....
Rate this:
Cancel
Srinivas - Chennai,இந்தியா
02-மே-202111:30:26 IST Report Abuse
Srinivas நீ இன்னுமா அரசியலில் இருக்கே? உன்னையெல்லாம் தமிழக மக்கள் ஓட ஓட விரட்டியடிக்கணும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X