பொது செய்தி

தமிழ்நாடு

மே தின கொண்டாட்டம்

Added : மே 01, 2021
Share
Advertisement
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி பேரூராட்சியில் துப்புரவு பணியாளர்கள் மே தின விழாவை கொண்டாடினர். விக்கிரவாண்டி பேரூராட்சி அலுவலகம் எதிரில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கி கொடியேற்றி வைத்து தொழிலாளர்கள், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.மின்வாரிய சங்க மத்திய குழு நிர்வாகி

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி பேரூராட்சியில் துப்புரவு பணியாளர்கள் மே தின விழாவை கொண்டாடினர். விக்கிரவாண்டி பேரூராட்சி அலுவலகம் எதிரில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கி கொடியேற்றி வைத்து தொழிலாளர்கள், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.மின்வாரிய சங்க மத்திய குழு நிர்வாகி சேகர், துப்புரவு ஆய்வாளர் விஸ்வநாதன், நிர்வாகிகள் வெங்கடேசன், தமிழ்செல்வி, வெண்ணிலா, வாசு, வெங்கடாசலம், வீரசேகர் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். திண்டிவனம்திண்டிவனம் பி.எஸ்.என்.எல்., அலுவலக வளாகத்தில் நடந்த விழாவில் ஓய்வூதியர் சங்க தலைவர் நாராயணசாமி, எம்ப்ளாயிஸ் யூனியன் முன்னாள் தலைவர் ஜோசப் ஆகியோர் சங்க கொடியேற்றி வைத்தனர்.என்.எப்.டி.இ., சங்க தலைவர் ஜெயசந்திரன், எம்ப்ளாயிஸ் யூனியன் தலைவர் மனோகரன், கிளை செயலர் செல்வக்குமார், மாவட்ட நிர்வாகி சாரங்கபாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.அரகண்டநல்லுார்திருக்கோவிலுார் இந்திய கம்யூ., சார்பில் நடந்த விழாவிற்கு ஒன்றிய துணை செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் சரவணன் மேதின கொடியை ஏற்றி வைத்து பேசினார்.ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாவட்டத் தலைவர் தமிழ்ச்செல்வன், அப்துல் கலாம் ஆட்டோ சங்க நிர்வாகி கார்த்திக், முன்னாள் கவுன்சிலர் ஜோன், நகர குழு நிர்வாகிகள் ரவி, முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.விழுப்புரம்விழுப்புரம் ஜி.ஆர்.பி., வீதியில் நகர லாரி சுமைதுாக்கும் தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் மே தின விழா நடந்தது.சங்க தலைவர் அருணாசலம் தலைமை தாங்கினார். செயலாளர் மனோகர், துணை தலைவர் ரங்கராஜ் முன்னிலை வகித்தனர்.இதில், அனைத்து தொழிலாளர்கள் மற்றும் சங்க உறுப்பினர்களுக்கு சீருடை, உணவு மற்றும் முககவசம் வழங்கப்பட்டது. இணை செயலாளர் தீனதயாளன், பொருளாளர் ஞானசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X